’சக்தி’ கோவிந்தன்

தினமணி இணைய இதழில் நான் வாராவாரம் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தொடரை வாசித்து வருவீர்கள் என்று நினைக்கிறேன்.  இதுவரை சார்வாகன், கு. அழகிரிசாமி, தி.ஜ.ர., திரு.வி.க. ஆகிய நால்வரோடு இன்றைய ஐந்தாவது கட்டுரையும் சேர்கிறது.  இன்றைய கட்டுரை ‘சக்தி’ கோவிந்தன் பற்றியது… http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/04/19/%E2%80%98%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E2%80%99-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/article2769160.ece Buy a cheap essay online

மீனா கந்தசாமிக்கு இலக்கியம் மற்றும் அமைதிக்கான இரட்டை நோபல்!!!

Dear Charu, I wanted to fulminate in my mother tongue. I’m not in the habit of using the phoenetic keyboard, so pls excuse the errors. க்ராண்டா சம்பந்தமான‌ உங்கள் பதிவைப் பார்த்தேன். உங்களுக்குத் தெரியாததல்ல‌ இந்த‌ காமெடி.  பட்டியலை கவனமாகப்‌ பாருங்க‌ள். அதில் உள்ள மக்கள் மூன்று வகை. சிலரின் தோல் உங்களைப் போன்று மாநிறம்.  இருந்தாலும் பாஸ்போர்ட் அட்டையின் நிறம் வேறு. இரன்டு, இந்திய எழுத்தின் … Read more

வைரமுத்துவுக்கு நோபல் பரிசு!

கிணற்றுத் தவளைகளாக வாழ்வதில் தமிழ் எழுத்தாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த விஷயம்.  சில எழுத்தாளர்கள் கிணற்றில் வாழும் ராஜ நாகத்தையே விழுங்கி ஏப்பம் விடும் அரக்கத் தவளைகளாக இருக்கிறார்கள்.  சிலரோ கிணற்றில் வாழும் எட்டு கோடி குஞ்சுத் தவளைகளும் அறிந்திருக்கக் கூடிய அளவுக்குப் பிரபலமாக இருக்கிறார்கள்.  ஆனால் எந்தத் தவளைக்குமே இந்தக் கிணற்றுக்கு வெளியே தெரியப்பட வேண்டும் என்பது பற்றிக் கவலையே இல்லை.  கிணற்றை விட்டு வெளியேறி வெளிநாட்டுக் கிணறுகளுக்கெல்லாம் சென்று … Read more

புத்தக விழாவுக்குச் சென்று வந்த அனுபவம்…

நேற்று ராயப்பேட்டையில் நடக்கும் புத்தக விழாவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.  நிறைய புத்தகங்கள் தேவைப்பட்டன.  கையில் காசு இல்லை.  வங்கியிலும் வெறும் 8000 ரூ. தான் இருந்தது.  எனக்குத் தேவைப்பட்ட நூல்களை வாங்க நிச்சயம் 20000 ரூ. வேண்டியிருக்கும்.  ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு பேசாமல் வந்து விட்டேன்.   இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.  புத்தகங்கள் வாங்குவதற்குக் கூட  பணம் இல்லாத அளவுக்கா இருக்கிறது ஒரு தமிழ் எழுத்தாளனின் நிலை?  தோப்பில் முகமது மீரானின் இரண்டு … Read more

யாருக்காக அழுதான்?

நான் சாருஆன்லைனில் வெளியிடும் நிகழ்ச்சிகளுக்கு வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வருவதில்லை என்பதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  டிஸ்கவரி பேலஸில் பாலு மகேந்திரா பற்றிய என் பேச்சைக் கேட்கவும் யாரும் வாசகர் வட்டத்திலிருந்து வரவில்லை.  நன்றி.  இப்போது தமிழ் ஸ்டுடியோ அருண் பின்வரும் தகவலை அனுப்பியுள்ளார்.  நான் செல்ல இருக்கிறேன்.  வழக்கம்போல் நீங்கள் யாரும் வர வேண்டாம்.  சனிக்கிழமை வீட்டு வேலை இருக்கும்.  கஷ்டப்படாதீர்கள்.  இருந்தாலும் இத்தகவலை வெளியிடாவிட்டால் அருண் வருத்தப்படுவார் என்பதால் இங்கே வெளியிடுகிறேன்… ஒரு … Read more