ஒரு கடிதம்

சாரு சார், நான் உங்கள் வாசகன் அல்ல. இது வரை உங்கள் எந்த படைப்பையும் படித்ததில்லை. ஒரே முறை கேணி கூடத்தில் சந்தித்தேன். கூடங்குளம் எதிர்ப்பு தொடர்பாக எழுத்தாளர்கள் படைப்பாளிகள் கையெழுத்து இயக்கத்தில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று ஒருவர் கேட்டார். பொது பிரச்சனைகளில் எழுத்தாளர்களின் கருத்தை இந்த சமூகமோ அரசோ மதிப்பதில்லை, என்ற தொனியில் பதில் அளித்தீர்கள். பிறகு எந்த அடிப்படையில் கூடங்குளம் எதிர்பாளர்களை விமர்சித்து உங்கள் உரத்த சிந்தனையை கொட்டி உள்ளீர் என்று … Read more

புத்தகச் சந்தையில்…

நாளை மாலை (13.1.13) ஐந்து மணி அளவில் புத்தகச் சந்தைக்கு வர இருக்கிறேன்.  நண்பர்கள் மற்றும் வாசகர்கள் என்னை சந்திக்கலாம்.  டயரி, பஸ் டிக்கட், கிழிந்த காகிதம், நோட்டுப் புத்தகம்,  போன்றவற்றில் ஆட்டோக்ராஃப் போடும் படி என்னை வற்புறுத்தி டார்ச்சர் செய்யாதீர்கள், ப்ளீஸ்.

Perfume

நாளை win tv யில் Perfume: the story of a murderer என்ற அற்புதமான படத்தைப் பற்றி காலை பத்தரை மணிக்குப் பேசுகிறேன்.

கோணல் பக்கங்கள் & ஸீரோ டிகிரி

கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகள் மற்றும் ஸீரோ டிகிரி ஆகிய நான்கு நூல்களும் இன்று வெளிவந்திருக்கின்றன.  கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.  புத்தகச் சந்தையில் கிழக்கு பதிப்பகம் ஸ்டால் விபரம் கீழே: Chennai book fair 2013 Date: Jan 11th to 23rd Kizhakku Stall Number: 246 For more details, pl contact:             95000 45608 கிழக்கு பதிப்பகத்தில் என்னுடைய எக்ஸைல் நாவலும் கிடைக்கும்.  உயிர்மையில் என்னுடைய மற்ற எல்லா புத்தகங்களும் கிடைக்கும்.

கறுப்புக் காமெடி நாடகம்

கோணல் பக்கங்கள் என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இணைய தளத்தில் நான் எழுதி வந்த பத்தி பெரும் வரவேற்பைப் பெற்றது.  அதன் பிறகு சாருஆன்லைனில் கோணல் பக்கங்களைத் தொடர்ந்தேன்.  அதன் மூன்று தொகுதிகளின் மறுபதிப்பு இப்போது கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது. அதோடு, ஸீரோ டிகிரி கிடைப்பதில்லை என்ற புகார் அவ்வப்போது இருந்து வந்தது.  அந்த நூலும் இப்போது மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளது. இப்போதைய சென்னை புத்தகச் சந்தையில் இந்த நான்கு … Read more