கொண்டாட்டம்

நாற்பது வயது ஆனதுமே மருந்து மாத்திரை மரணத்துடன் போராடுதல் என்று வாழும் மூடர்களிடம் எழுபது வயதில் ஆட்டம் போடுவது பற்றிப் பேசினால் என்ன ஆகும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.  Iggy Pop என்ற அமெரிக்க ராக் பாடகருக்கு 66 வயது ஆகிறது.  மிஷல் வெல்பெக்கின் the possibility of an island நாவலை அடிப்படையாகக் கொண்டு சில பாடல்கள் எழுதிப் பாடி இருக்கிறார்.  கொண்டாட்டம் என்ற வார்த்தையின் அடையாளம் அவரும் அவரது பாடல்களும்.  பின்வரும் இணைப்பில் … Read more

கணேஷ் அன்புவுக்கு, அன்புடன்…

கணேஷ் அன்புவுக்கு, அன்புடன் சாரு எழுதுவது.  முன்பு ஒருமுறை ஸீரோ டிகிரியை நான் வாசித்துப் பதிவு செய்யலாமா என்று நாம் யோசித்துக் கொண்டிருந்தோம் இல்லையா?  அதற்கு ஒரு முன்மாதிரி கிடைத்துள்ளது.  எனக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் மிஷல் வெல்பெக் (Michel Houellebecq) அவர் எழுதிய கவிதைகளைப் படிக்கிறார்.  அதை அவருடைய நண்பர்கள் விடியோவாகவும் எடுத்துள்ளனர்.  பின்வரும் லிங்கை அவசியம் பாருங்கள்.  நாமும் செய்யலாமா, எப்போது ஆரம்பிக்கலாம், யார் யார் மாடல்கள் என்று எனக்கு மெயில் செய்யவும்… மாடல்கள் … Read more

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்… (2)

இந்தியாவில் எழுத்தாளர் என்றால் அவருக்கென்று சில அடையாளங்கள் உள்ளன.  அவர் நிச்சயமாக இடதுசாரியாக இருக்க வேண்டும்; anti Hindu வாக இருக்க வேண்டும்; நரேந்திர மோடியை எதிர்த்தே ஆக வேண்டும் (சமீபத்தில் யு.ஆர். அனந்தமூர்த்தியின் உளறலை நீங்கள் படித்திருக்கலாம்); நாஸ்திகவாதியாக இருக்க வேண்டும் (ஆனால் இந்துக் கடவுள்களை மட்டும்தான் மறுக்க வேண்டும்; மற்ற கடவுளகளை அல்ல); முற்போக்குச் சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும்; பெண்கள் எதைச் செய்தாலும் ஆதரிக்க வேண்டும்… இது போன்ற cliche-க்கள் ஐரோப்பாவிலும் உண்டு.  … Read more

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்…

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் எனக்கு மிக நெருக்கமான நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன்.   அப்போது என்னைப் பிடிக்காத ஒரு மூத்த தமிழ் விமர்சகர் அங்கே வந்தார்.  அவர் என்னைக் கண்டு கொள்ளவில்லை.  ஒரு சபையில் தீண்டத் தகாதவனைப் போல் நடத்தப்படுவது எனக்குப் புதிது அல்ல என்பதால் நானும் அதை சகஜமாகவே எடுத்துக் கொண்டேன்.  அந்த அறையில் நாங்கள் மூன்றே பேர்தான்.  விமர்சகரும் என் நண்பரும் பேசிக் கொண்டிருந்தனர்.  விமர்சகர் என் பக்கமே திரும்பவில்லை.  அப்போது விமர்சகர் Michel … Read more

MANA

எந்த ஒரு மேற்கத்திய rock band-க்கும் சமமான ராக் குழு MANA.  மெக்ஸிகோவைச் சேர்ந்த இந்தக் குழுவின் பாடல்களை நான் கடந்த பத்து ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன்.  எனக்கு மிகப் பிடித்த ராக் குழு மானா.  லத்தீன் அமெரிக்காவில் நம்பர் ஒன் குழுவாகக் கருதப்படும் மானாவைக் கேட்க மொழி ஒரு தடையாக இருக்காது. http://www.youtube.com/watch?v=ywyVr5cM6KU

இசை எனும் அற்புதம்…

நான் யோசித்து முடித்த பிறகே எழுதுகிறேன்.  அதுவும் யோசிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி யோசிப்பதில்லை.  என்னென்னவெல்லாம் எழுத வேண்டும் என்று மடை திறந்த வெள்ளம் போல் வந்து குவிந்திருக்கும்.  நேரம் கிடைக்கும் போது பேய் வேகத்தில் டைப் செய்வேன்.  ஒரு நொடி கூட யோசிப்பதில்லை.  விரல்களில் வலி எடுக்கும் அளவு வேகத்தில் டைப் செய்வேன்.  கூடவே இசை ஓடிக் கொண்டிருக்கும்.  எப்படிப்பட்ட இசை என்று பின்வரும் இணைப்பைக் கேளுங்கள்.  ஆத்மாவை வருடி விடும் இசை இது… … Read more