9. இசை பற்றிய சில குறிப்புகள்

இந்தத் தொடரின் எட்டாவது அத்தியாயம் டிசம்பர் எட்டாம் தேதி (2020) வெளியாகி இருக்கிறது.  சில வாசகர்கள் இந்தத் தொடரை ஆழமாக வாசிக்கிறார்கள் என்று தெரிகிறது.  அவர்கள் மீண்டும் ஒருமுறை தொடரை வாசித்து விட்டு இதைத் தொடரலாம்.  அல்லது, இதைத் தனியாகவும் வாசிக்கலாம்.  இந்த அத்தியாயத்தில் அவ்வளவு ஆழமாகச் செல்லப் போவதில்லை.  வேறொரு பணியில் இருப்பதால்.  பா.ராகவன் சமீபத்தில் எனக்கு ஒரு ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரை அறிமுகம் செய்தார்.   இசைக்கும் எனக்குமான தீவிரமான சம்பந்தம் கடந்த இருபது ஆண்டுகளாக … Read more

பாகவதம்

இப்போது பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறேன். கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்தது. 1935-இல் வெளியானது. மூன்று ரூபாய் எட்டணா விலை. இதை முடித்து விட்டு, அல்லது, இதோடு கூட சேர்த்து ஸ்வாமி பிரபுபாதா மொழிபெயர்த்ததும் படித்தால் நல்லது என்று தோன்றியது. அதை யாரேனும் நண்பர்கள் வாங்கித் தர முடியுமா? முடிந்தால் எழுதுங்கள். விலாசம் தருகிறேன். எங்கே கிடைக்கும் என்ற விவரம் கூட தெரியாது. charu.nivedita.india@gmail.com

ஜெயமோகனின் வாசகர்களுக்கு…

அன்புள்ள சாறு, தங்களின் எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை . புத்தக கண்காட்சியில் தங்களை பார்த்தும், முகத்தை திருப்பி கொண்டுபோனவன் நான். பாலகுமாரனில் தொடங்கி, ஜெயகாந்தன், சுஜாதா, தி. ஜா, ஜெயமோகன், லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, அமி  என்று எல்லோரையும் படித்துள்ளேன். ஏனோ ஜெயமோகனின் தாக்கத்தால் என்னை அறியாமலேயே தங்களை அணுக தடுத்தது. அமி பற்றி தாங்கள் பேசியது யூடியூபில் கேட்டேன். இவ்வளவுநாள் நான் இறுக்கமாக தங்களின் எழுத்தையோ, பேட்சையோ செவிசாய்க்காதது  என் தவறென உணர்கிறேன்.  புதுமைபித்தனை … Read more

6. நிகழும் அற்புதம்

நான் யாருக்கும் ஒருபோதும் அறிவுரை சொல்வதில்லை.  சுய அனுபவம்தான் காரணம்.  இருபத்தைந்து வயது வரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை.  குறிப்பாக என் பெற்றோர்.  அதற்குப் பின் யார் யாரெல்லாம் எனக்கு அறிவுரை சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் நான் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தேன்.  இருபத்தைந்து வயது வரை அறிவுரை சொல்லாத பெற்றோர் அதற்குப் பிறகு எனக்கு அறிவுரை சொன்னார்கள்.  வீடு வாங்கு.  ஒரு வருடம் போய்ப் பார்க்க மாட்டேன்.  குடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சில அன்பர்கள் அதிகம் குடிக்காதீர்கள் … Read more

5. ஒரு சிறிய கூழாங்கல் போதும்…

இதே தலைப்பில் அமைந்த மூன்றாவது கட்டுரையின் தொடர்ச்சி இது: தமிழ்நாட்டிலேயே நாகர்கோவில் மாதிரி ஒரு ஊர் வராது.  சொர்க்கம் மாதிரி இருக்கும்.  ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நரகர்கள்.  அசுரர்கள்.  பெரும்பாலான என்று சொல்லி விட்டேன்.  எல்லோரும் அல்ல.  அதிலும் என் வாழ்வில் நான் சந்தித்த நாகர்கோவில் ஆட்கள் ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிக் கொண்டேதான் போகிறார்கள்.  ரெண்டு மாதத்துக்கு முன்பு ஒருத்தர் – ஒரு இருபத்தஞ்சு வயது சின்னப் பையன் – வந்தார்.  பழகினார்  அவரிடம் நான் நாகர்கோவிலாச்சே, … Read more

நண்பர்களை ப்ளாக் பண்ணிய காதை (சற்றே மாற்றியது!)

முகநூலில் நண்பர்களை அவ்வப்போது ப்ளாக் செய்வது என் வழக்கம்.  சென்ற வாரம் அப்படி இரண்டு நண்பர்களை ப்ளாக் செய்யும்படி நேர்ந்தது.  அதை உங்களுக்கும் சொல்ல வேண்டும்.  முதல் நண்பர் செல்வா.  அவர் என் ஆளுமையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தவர்.  அவருடைய மேனரிஸங்களில் ஒன்று, ”எப்போ வர்றீங்க செல்வா?” என்றால், இதோ கிளம்பிட்டேன் சாரு என்பார்.  ஆனால் மறுநாள்தான் வருவார்.  அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொள்ள பெரும் பிரச்சினை ஆகி விட்டது.  சில நிபுணர்கள் இருப்பார்கள்.  … Read more