எழுத்தறிவித்தவன்

அன்புள்ள சாரு ,  வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே நீங்கள் தான். 15 அல்லது 16 வயது இருக்குமென்று நினைக்கிறேன் முதன் முதலில் தேகத்தை கையில் ஏந்திய போது , என்ன இது அடல்ட் கண்டன்ட் நாவல் போலிருக்கிறதே என்று தான் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வயதில் அது எதைப்பற்றிப் பேசுகின்றதென்று சுத்தமாகப் புரியவில்லை ஆனாலும் அது எழுதப்பட்டிருந்த விதம் என்னை அப்போது வாசிக்கத் தூண்டியது. அப்போதிருந்தே தேகம் என்பது மனதில் பதிந்த ஒரு … Read more

184. அந்த வெளிர்நீலப் புள்ளி…

அன்புள்ள சாரு,  எப்போதும் எனக்குள்ளே ஒரு கர்வம் இருக்கும் – என் சிந்தனைகள் என் சார்புகள் எல்லாம் என்னாலே என் மூலம் உருவானது, நான் சுயம்பானவன் என நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் என் சிந்தனைகளின் ஆழத்தில் சென்று பாத்த்தால் அது எல்லாமே உங்களைப் படித்து, நீங்கள் பேசியதைக் கேட்டு உங்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதுவாகவே நான் மாறியிருக்கிறேன் என்பதே நிஜம்.  என்னை உருவாக்கிய உங்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு. இந்த வீடீயோவை உங்களுக்கு சமர்பிக்கிறேன் சாரு, இதில் இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நீங்கள் என்னிடம் சொல்வது போலவே இருக்கும். இந்த வீடியோவில் சொல்ல வரும் கருத்துக்கள் கூட நீங்கள் ஏற்கனவே பல முறை கூறியவை தான் சாரு, இறைவன் படைத்ததை மீண்டும் அவருக்கே படைப்பது போல் இதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சாரு இன்று மாலைக்கான zoom meetigல் கலந்துக்கொள்ள விருப்பமாக இருக்கிறேன், link தர முடியுமா? அன்புடன் கார்த்திக் வளனைப் போலவே கார்த்திக் என்னுடைய இன்னொரு பிள்ளை.  கார்த்திக், முத்துக்குமார், ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் இல்லையேல் என்னால் இத்தனை எழுதியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.  என் குடும்பத்தில் ஒருவர் கார்த்திக்.  நானாக யாருக்கும் லிங்க் அனுப்பாததன் காரணம், நான் அனுப்பி அவர்களால் வர முடியாத சூழல் இருந்தால் அவர்களுக்கு மிகவும் தர்மசங்கடமாகப் போகுமே என்றுதான்.  மேலும், கார்த்திக் எல்லாம் மனோவிடம் … Read more

இனிது இனிது

சாரு, நீங்கள் எனக்குப் பொருள்வயமாக ஒன்றைக் கொடுத்தாக நான் கருதவில்லை நீங்கள் எனக்குள் இருளை நகர்த்தி இருக்கிறீர்கள் அதனால் அதுவரை நான் உணர்ந்திராத ஒரு விசாலமான அறையின் கதவு திறந்தது எனக்கு நீங்கள் அதை அடையாளம் காட்டினீர்கள் என் அம்மா அப்பா இவரெனச் சொன்னது போலிருந்தது இதெல்லாம் சொல்லியாக வேண்டும் அல்லது சொல்ல வேண்டாம் என்னுமளவு நீங்கள் அன்னியருமில்லை இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் *** செல்வகுமார்

182. சில கடிதங்கள்

வணக்கம் சாரு, தாங்கள் மதுரை வந்து இருந்த பொழுது அலைபேசியில் தத்து பித்து என்று பேசிய அதே கோபிநாத் தான் நான். மன்னிக்கவும். இதற்கு முன் நான் இவரை நேரில் சந்தித்தால் என்ன பேசுவோம். என்று கனவு கண்டவர்களில் நீங்களும் ஒருவர்…….அதுவே தத்து பித்துவுக்குக் காரணம்.  கடந்த ஜுலை மாதம் என்னுடைய அவ்வா காலம் ஆனார் . என் மடியில் தான். இறப்பில் எதுவும் புதிதில்லை, அநேகமாக தங்களின் அவ்வா சிறுகதையில் வரும் அவ்வா போல் தான் … Read more

181. அடியேனின் எழுத்து

Hi Charu, நான் உங்கள் புத்தகங்களில் ‘தேகம்’, ‘மூடுபனிச் சாலை’ படித்து இருக்கிறேன். உங்கள் எழுத்து படிக்கப் பிடிக்கும். ஆனால் எழுத்து வகைமை புரியாமல் இருந்தது. சமீபத்தில் அபிலாஷ் பேசிய ‘சாருவை பிரதியாக வாசித்தல்’ உரை பெரிய திறப்பாக இருந்தது. அது உங்கள் படைப்புகளுக்குள் அணுக்கமாக என்னை அழைத்துச் செல்ல பெரும் உதவிபுரியும் என்று நம்புகிறேன். உங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீபத்திய ‘இசை பற்றிய குறிப்புகள்’ சீரிஸ் அல்டிமேட் சாரு. எனக்கு இசைக் கேட்பவர்கள் … Read more

ஒரு வாழ்த்து

அன்புள்ள சாரு, உங்களது புதிய வாசகன் நான். உங்களது எழுத்திற்கும் எனக்குமான தொடர்பு   “விருப்பு மற்றும் பதற்றத்திலிருந்து விருப்பிற்கு” என்பதாகிய ஒரு தொடர்பாகும். உங்களது எழுத்தைப் படித்தவுடன் பின்வரும் இரு நிலைகளில் ஏதோ ஒன்றையே நான் எட்டுகிறேன். ஒன்று: படித்தவுடன் விருப்பம் கொள்வது / பிடித்துப் போவது இரண்டு: படித்தவுடன் ஒருவாறான பதற்றத்திற்கு உள்ளாகி, ஏன் இப்படி எழுதுகிறார் எனும் உணர்வு தோன்றும்.   பின்னர் அது குறித்த சிந்தனை எழும்.  நம்முடைய பிரச்சினையைத் தானே எழுதுகிறார் அல்லது நம்மை சுற்றி இருப்போரின் பிரச்சினையைத் தானே எழுதுகிறார் என்ற எண்ணம் தோன்றும்.   பதற்றமின்றி மீண்டும் படிக்கும் நிலை அமையும்,  அதன் பின்னர் அவ்வெழுத்தில் விருப்பம் வரும் / பிடித்துப் போகும். இந்த இரண்டாம் நிலை ஏற்படக் காரணம், படிக்கவோ எழுதவோ பேசவோ கூடாது என வரையறுக்கப்பட்டவைகளையும் உங்கள் எழுத்து கொண்டுள்ளது.   அதற்கும் மேலாக அதை எந்த ஒரு பாசாங்கும் இல்லாமல், உண்மையை உண்மையாய் நீங்கள் எழுதிச்செல்வது.   வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் தரும் உண்மையை பெற்றுக்கொள்ள … Read more