136. அடியேனின் முதல் கடிதம், முதல் கதை…

இன்னும் இந்த வணிக எழுத்து விஷயம் கையை விடாது போல் தெரிகிறது.  சுஜாதாவைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் சுஜாதா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  சுஜாதாவுக்கு அது வசதியாக மறந்து போய் இருக்கும்.  காரணம், புகழ் என்பது மிகப் பெரிய போதை.  அதை அடித்துக் கொள்ள வேறு எந்த போதையும் இல்லை.  சுஜாதா மறந்து போன, அவரது ரசிகர்களுக்குத் தெரியவே தெரியாத விஷயம் என்னவென்றால், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா வேறு; வணிகப் பத்திரிகைகளில் எழுதிக் … Read more

135. அந்தணர் என்போர்…

இன்று முகநூலில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவு என் மனதைத் தொட்டது.  அவர் தனக்கென்று வாங்கி வைத்திருந்த பரோட்டாவையும் சால்னாவையும் ஒரு நாய் வந்து சாப்பிட்டு விட்டது.  மற்ற சமயமாக இருந்தால் அடி பின்னி எடுத்திருப்பார்.  நேற்று ஏதோ என் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டார்.  இன்று அந்த நாய்க்கு செம உதை இருக்கிறது.  அதைத் தடுக்கவே இந்தப் பதிவு. எல்லா உயிரிலும் இருப்பது நம்முடைய ஆன்மாதான், எல்லா உயிருமே நாம்தான் என்றெல்லாம் நான் ராஜேஷுக்கு சொல்ல வரவில்லை.  … Read more

பூச்சி 134: வணிக எழுத்தும் இலக்கியமும் (தொடர்கிறது)

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,  வணக்கம், நலம் விழைகிறேன்.  என்னுடைய 17 வயதில் முதன்முதலாக உங்களை வாசித்தேன். இப்போது 25 வயதில் இருக்கிறேன். இத்தனை ஆண்டுகால வாசிப்பில் விடுபட்டவற்றையும், ஏற்கெனவே வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்வதற்கும் உங்கள் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ஏற்கெனவே இருந்த உங்கள் புத்தகங்கள் நண்பர்களிடம் வாசிக்கக் கொடுக்க, அவை அப்படியே கைமாறிச் சென்றுவிட்டன. நான் புத்தகங்களைக் கடனளிக்கிறவன் அல்லன் என்றபோதிலும், புதிதாக வாசிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு உங்கள் கட்டுரைத் தொகுப்புகளைத் தருவது வழக்கம். … Read more

இசை பற்றிய சில குறிப்புகள் – 1

இந்த விஷயத்தில் நான் இந்தச் சமயத்தில் இறங்கவே கூடாது.  ஹராம்.  நாவலை முடிக்கும் அவசரத்தில் இருக்கிறேன்.  ஆனாலும் சூழலின் நெருக்கடி என்னை இந்த இடத்தை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது.  நான் எழுதாவிட்டால் இதை எழுத ஆட்களே இருக்க மாட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.  அதனால்தான் அவ்வப்போது இதை எழுதி விடலாம் என்று நினைத்தேன்.  இது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு உவப்பளிக்காது என்று தெரியும்.  ஆனாலும் என்னைப் போல் யாரேனும் இதைப் பதிவு செய்யத்தான் வேண்டியிருக்கிறது.  இது ஒரு … Read more

பூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் செத்து விடும் என்று எழுதியிருந்ததைப் படித்து பல நண்பர்கள் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள்.  அதில் ஒரு சிறிய திருத்தம்.  பாலி முற்றிலுமாக கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது.  ஆனால் சம்ஸ்கிருதம் இப்போதும் அறிஞர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  காரணம், பாலியில் இலக்கியம் இல்லை; சம்ஸ்கிருத இலக்கியமும் இலக்கணமும் கடல் போல் கிடக்கிறது.  இப்படியாக தமிழையும் அறிஞர்கள் காலம் உள்ளளவும் படித்துக் கொண்டிருப்பார்கள்.  இப்போதும் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது?  ப. சிங்காரத்தை … Read more

பூச்சி 132: மொழியின் அழிவு

நாவலை எழுதி முடிக்கும் வரை வேறு எந்தப் பஞ்சாயத்திலும் ஈடுபடக் கூடாது என்ற வைராக்கியம் ஒரே ஒரு வார்த்தையைப் பார்த்ததால் வயிறு பற்றி எரிந்து இங்கே வந்து விட்டேன்.  அந்த வார்த்தை கலோக்கியல்.  எழுதியவர் நம் அராத்து.  இந்தப் பஞ்சாயத்து பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.  ஹேப்பனிங் ப்ளேஸ் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை.  ஃபீலிங் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை.  மிஸ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை.  லவ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை … Read more