பெண் சாபம்

22.4.2017 ”அநிருத்தன் வாசுதேவனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருக்கிறது.  அதேபோல் உங்களுக்கும் கிடைக்கும்; உற்சாகமாக சீக்கிரம் பண்ணுங்கள்” என்று என் மொழிபெயர்ப்பாளர் நண்பரிடம் நான் சொல்லியிருக்கக் கூடாதுதான்.  என் வாயால் கெட்டேன். அப்புறம் நடந்த உரையாடல்: “அநிருத்தன் சாதாரண ஆள் இல்லை.  சல்மா மற்றும் சுகிர்த ராணியின் கவிதைகளுக்கு நடன வடிவம் கொடுத்து அரங்கேற்றியவர்.  ’மாவு’ போராளி. எல்.ஜி.பி.டி. போராளி.  சாகித்ய அகாதமி என்ன, புக்கரே கொடுப்பார்கள்.  என்னால் இப்போது நடனம் பயில்வது சாத்தியம் … Read more

ஹெரால்ட் ப்ளூம், ஜெயமோகன், செவ்வியல் இலக்கியம், பின்நவீனத்துவம்…

20.4.2017 வெள்ளைக்காரன் காலத்துல நாடு எப்படி இருந்துது தெரியுமா என்று சில பெரிசுகள் அங்கலாய்ப்பதை என் சிறு வயதில் கேட்டுக் கேட்டு, எந்தக் காலத்திலும் பழசை நினைத்து வியக்கக் கூடாது என்று சபதமே செய்திருக்கிறேன்.  ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அதை நானே செய்ய வேண்டியிருக்கிறது.  என் காலத்தில் கல்வி இலவசமாகக் கிடைத்தது.  என் காலத்தில் இத்தனை நோய்நொடிகள் இல்லை.  என் காலத்தில் தண்ணீர் காசுக்கு விற்கப்படவில்லை.  இப்படியே ரெண்டு மூணு பக்கத்துக்கு எழுதிக் கொண்டு போகலாம்.  அதேபோல் எண்பதுகளில் … Read more

சமஸ்

17.4.2017 சில தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் தி இந்துவில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தீர்களா? படிக்கவில்லையெனில் உடனே இங்கே படித்து விடுங்கள். நான் கடந்த பல ஆண்டுகளாகப் புலம்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவரும் அனுபவித்து எழுதியிருக்கிறார். விஷயம் இதுதான். தில்லியில் நடந்த ஒரு கவிதைக் கருத்தரங்குக்குச் சென்றிருக்கிறார். இந்திய மொழிகளிலிருந்து பல கவிஞர்கள். கடைசியில் பார்த்தால் இவர் கவிதைகள் மட்டுமே வேறு ஏதோ ஒரு தளத்தில் இருந்திருக்கின்றன. அது மட்டும் அல்ல; அந்தக் கவிஞர்கள் அத்தனை … Read more

ஃப்ரான்ஸும் நானும் – 2

மின்னம்பலத்தில் நான் எழுதி வரும் நாடோடியின் நாட்குறிப்புகள் தொடரிலேயே ஒரு குட்டித் தொடராக ஃப்ரான்ஸும் நானும் என்று கடந்த இரண்டு வாரமாக வருகிறது. அதற்காகத் திரும்பவும் எனக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களைப் படித்தேன். இந்த வேலையையெல்லாம் ஃப்ரெஞ்ச் தொடர்பு உள்ள மற்றவர்கள் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யாததால் நானே செய்கிறேன். தமிழில்தான் நம்முடைய எழுத்துக்கு நாமே விளக்கவுரை, ஆய்வுரை, விமர்சனம், மதிப்புரை, பின்னட்டை விளக்கம் எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது… https://www.minnambalam.com/k/2017/04/17/1492367413