கையெழுத்து : பா. ராகவன்

14.04.2017 என் கையெழுத்து அச்சுக் கோர்த்தது போல் இருக்கும், முன்பு.  இப்போது கொஞ்சம் மெருகு குறைந்துள்ளது.  கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பார்கள்.  அதேபோல் கையெழுத்து மோசமாக இருந்தால் தலையெழுத்து ஜோராக இருக்கும்.  காந்தி, ஜெயமோகன் இருவரின் கிறுக்கல் கையெழுத்து ஞாபகம் வருகிறது. பா. ராகவன் கல்கியில் பணியாற்றிய சமயத்திலிருந்து என் நண்பர்.  சமீபத்தில் எக்ஸைல் படிக்க ஆரம்பித்தார்.  எப்படிப் போகிறது என்று மெஸேஜ் கொடுத்தேன்.  ’மவன, எவன் எடுத்தாலும் வெக்கமாட்டான்’ என்று பதில் … Read more

விஷால் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? : சரவணன் சந்திரன்

13.4.2017 சரவணன் சந்திரன் முகநூலில்: இதுவும் ஒரு முக்கியமான மேட்டர்தான். இப்போதே பேசி செட்டில் செய்துவிட வேண்டும். விட்டுவிட்டால் அப்புறம் பின்னால் குத்துதே குடையுதே என்று புலம்பக்கூடாது. சமீப காலங்களாகவே நடிகரும் அந்தத் துறை சார்ந்த சில சங்கங்களில் பொறுப்பில் இருப்பவருமான விஷால் பேசி வருவது குறித்துப் பேசத்தான் இந்தப் பீடிகை. இளைஞர்களின் கையில் அதிகாரம் வருவதை எப்போதுமே ஆதரித்தால் தப்பில்லை என்பது தனிப்பட்ட கருத்து. இளைஞர்கள் கொஞ்சம் பிடிப்பாகச் செயல்படுவார்கள் என்று கருதி அந்தத் துறை … Read more

அசோகமித்திரனின் ஆவி

13.4.17 அசோகமித்திரனின் ஆவி சும்மா பூந்து விளையாடுகிறது.  இறந்து இத்தனை தினங்கள் ஆகியும் சர்ச்சை தீர்ந்தபாடில்லை.  அசோகமித்திரனின் இறுதிச் சடங்கில் சுமார் 25 பேர் தான் கலந்து கொண்டார்கள் என்று குமுதத்தில் எழுதியிருந்தேன்.  அதோடு விட்டிருக்கலாம்.  என் போறாத காலம், வைரமுத்துவின் பெயரையும் சேர்த்து விட்டேன், இப்படி: ”பாரதியின் சவ ஊர்வலத்தில் பதினான்கு பேர் கலந்து கொண்டார்கள்.  அவருடைய பிணத்தின் மீது மொய்த்த ஈக்களை விட சவ ஊர்வலத்துக்கு வந்த எண்ணிக்கை கம்மி என்று துயரத்துடன் எழுதினார் … Read more

மணி ரத்னத்துக்கு ஒரு கடிதம் : பிரபு காளிதாஸ்

11.4.17 பிரபு காளிதாஸ், முகநூலில்: இது மணிரத்னம் பார்வைக்குப் போகுமா தெரியவில்லை. பார்க்கலாம். மதிப்பிற்குரிய மணிரத்னம் அவர்களுக்கு, உங்களிடம் முதலில் ஒன்று சொல்லவேண்டும் ஸார். உங்களுக்கு இப்போது ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறார்கள் அல்லவா ?. அவர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் உங்களை ரசிக்க முடியாத ஏரியாவுக்குப் போய்விடுவார்கள். அதாவது அடுத்த தளத்திற்கு சென்றுவிடுவார்கள். I Bet. என்ன காரணம் தெரியுமா ? இதே மாதிரி உங்களுக்குக்காக இருபது வருடம் முன்னால் கொடி பிடித்த ரசிகர் கூட்டத்தில் … Read more