சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

மனுஷ்ய புத்திரனின் கவிதை வெளியீட்டு விழாவுக்குப் போகாதது சற்று ஏமாற்றமாக உள்ளது.   சூரியனுக்கு அருகில் ஒரு வீடு இன்னும் படிக்கவில்லை.  படிக்க வேண்டும்.  அதற்கு இடையில் அதில் உள்ள கடைசியாக என்ற கவிதையை எடுத்து ரொம்பப் பிடித்தது என்று சொல்லி கணேஷ் அன்பு வாசகர் வட்டத்தில் பகிர்ந்து இருந்தார்.  உடனே  Guru Manutd என்ற வாசக நண்பர் அந்தக் கவிதை போலவே அமேலி என்ற பிரபலமான  ஃப்ரெஞ்ச் படத்தில் வருகிறது என்று சொல்லி அந்த வசனத்தையும் எழுதியிருந்தார். … Read more

ஒரு முக்கியமான அறிவிப்பு

ஜனவரி 4 அன்றைய விழாவில் ஒரு முக்கியமான  அறிவிப்பை வெளியிட இருக்கிறேன்.  ஏதோ சஸ்பென்ஸுக்காக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.  உங்களை ஏமாற்ற மாட்டேன்.  எக்ஸைல் – 2 என்ற என்னுடைய நாவல் பற்றிய அறிவிப்பும் இல்லை.  அதை நான் சாருஆன்லைனிலேயே எழுதி விட்டேன்.  இது வேறு.  இந்த அறிவிப்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒரு தீவிரமான பாதிப்பைச் செலுத்தும்.  இப்போதைக்கு இது போதும்.  விழாவில் பேசும் போது விபரம் தெரிவிக்கிறேன்.

ஒரு அட்டகாசமான பாடகி…

இன்று முகநூலில் சற்று நேரம் மேய்ந்து கொண்டிருந்த போது Thsuh Ba என்ற நண்பர் அறிமுகப்படுத்தியிருந்த Miley Cyrus என்ற இந்தப் பாடகியைக் கேட்டேன்.  அற்புதம்.  குரலில் அப்படி ஒரு ஈர்ப்பு. ரிஹானாவுக்குப் பிறகு இவ்வளவு வசீகரமான குரலை இப்போதுதான் கேட்கிறேன்.    சமீபத்தில் இவர் உள்ளாடையோடு (மட்டும்) கரமைதுனம் செய்வது போன்ற பாவனைகளோடு கூடிய பாடல் ஒன்று வெளியே கசிந்து விட்டதாக அறிகிறேன்.  இன்னொரு வெர்ஷனையும் தருகிறேன். http://www.youtube.com/watch?v=-YICuUtkjlg  

எக்ஸைல் – 2

Dear Charu,  A book fair without any of your books isn’t any interesting.   Let this be the last fair without any of your releases . Waiting for Exile 2 eagerly… என்று என் தோழியிடமிருந்து இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. எக்ஸைல் ஆங்கில மொழிபெயர்ப்பு தாமதமாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் எக்ஸைல்-2 ஐ தமிழிலேயே வெளியிட்டு விடலாமா என்று நான் நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  அந்த நேரத்தில்தான் … Read more

Balu, I love you…

தலைமுறைகள் பார்த்தேன்.  காவியம்.  ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்.  விரிவான விமர்சனம் (சிறிய கட்டுரைதான்)  ஒன்றாம் தேதி கடைகளில் கிடைக்கும்…