சன்மானம்

வணக்கம் சாரு அவர்களே,நான் தற்பொழுது தங்களுடைய வரம்பு மீறிய பிரதிகள் என்ற கட்டுரை தொகுப்பினை வாசித்து வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது,அதில் தாங்கள் நிறைய எழுத்தாளர்கள் குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கைளை குறிப்பிட்டுள்ளீர்கள் அதை படித்த பிறகு எனக்கும் அவர்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது யாரிடமிருந்து தொடங்கலாம் என்பதை தாங்கள் எனக்கு சற்று ஆலோசனை கூற முடியுமா.இப்படிக்குப. லட்சுமி நாராயணன். தாராளமாகச் சொல்லலாம். விரிவாகவே பேசலாம். ஆனால் அதற்கு நீங்கள் எனக்குக் கட்டணம் தர … Read more

நன்றி

நன்றி என்ற வார்த்தையைக் கேட்பது எனக்கு எப்போதுமே லஜ்ஜையான விஷயம். நன்றி பற்றி சற்று நேரத்துக்கு முன்பு என் நண்பரிடம் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் எதிர்பார்ப்பது நன்றி அல்ல. நன்றி பகர்வது உங்கள் பண்பின் அடையாளம். அவ்வளவுதான். நான் என் தந்தைக்கும் தாய்க்கும் நன்றியா சொன்னேன். அது அல்ல விஷயம். ஆனால் எனக்குக் குழந்தை பிறந்த விஷயத்தை என் தகப்பனுக்கோ உயிர் நண்பனுக்கோ தெரிவிக்க வேண்டியது என் கடமை அல்லவா? … Read more

Huntsman

லக்ஷ்மி சரவணகுமார் தமிழின் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். கருத்து முரண்பாடுகள் அவருக்கும் எனக்கும் நிறைய உண்டு. அநேகமாக எல்லா விஷயங்களிலுமே என்று நினைக்கிறேன். ஆனால் அவருடைய பல சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உப்பு நாய்கள் நாவலும் எனக்குப் பிரீதியானது. ஒரே ஒரு ஆபத்துதான். வண்ணதாசன் அவரைப் புகழ்ந்து புகழ்ந்து பேசுவார். அப்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கும். அந்தப் பக்கம் போய் விடாதே என்று லக்ஷ்மியிடம் எச்சரிப்பேன். அவருடைய புத்தக விமர்சன உரையிலும் இதைக் … Read more

பந்து இப்போது என் வசம்… (உரையாடல் தொடர்கிறது)

ஒரு விளக்கம்: சுஜாதாவைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களுக்கு நான் சொன்னது புரியவில்லை.  சுஜாதாவிடமிருந்து நானும் கற்றவன் தான்.  மிக சுவாரசியமாக எழுதியவர் அவர்.  ஒருமுறை ஒரு கதையில் கணேஷ் நியாட்சே புத்தகம் படித்துக் கொண்டிருப்பான்.  அந்தக் காலத்தில் ஏது இண்டர்நெட்?  கல்லூரியில் உள்ள என்ஸைக்ளோபீடியாவில் N எழுத்தில் வரும் நியாட்சே முழுவதையும் தேடினேன்.  ஜெர்மானியத் தத்துவவாதியான நீட்ஷே தான் சுஜாதாவில் நியாட்சே ஆகியிருந்தார்.  ஆனாலும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சுஜாதாதானே?  ஏனென்றால், … Read more

சாரு – அய்யனார் உரையாடல் – அடுத்த பகுதி

”இலக்கியவாதிகள் தங்கள் இலக்கியப் பயணத்தில் திடார் திடாரென அரங்கத்துக்கு வருவதும், உறக்கத்தில் ஆழ்வதும் புதிய விஷயமல்ல. ஆனால் செல்லப்பா தன்னுடைய கடைசி மூன்று ஆண்டுகளில் (1995-1998) காட்டிய வேகமும் வெளிப்படுத்திய சக்தியும் ஆச்சரியப்படக்கூடியவை. இந்த நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு கையெழுத்து வடிவில் நைந்து போயிருந்த அவருடைய என் சிறுகதை பாணி (250 பக்கம்) சுதந்திர தாகம் (1800 பக்கம்) ராமையாவின் கதைப்பாணி (368 பக்கம்) ஆகிய பழைய பிரதிகள் புத்தக வடிவம் பெற்றன. இவையெல்லாவற்றையும் … Read more