தஞ்சை ப்ரகாஷ்

”நிறைய வார்த்தைகளை உச்சரிப்பு புரியாமல் கையாண்டிருக்கிறார் பிரகாஷ்.”இப்படி ஒரு நண்பர் என் முகநூல் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். தஞ்சாவூர் இஸ்லாமிய வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவு செய்த முதல் எழுத்தாளர் பிரபஞ்சன். அவர் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு பெரிய அகராதியே போடலாம். அதற்காக அவருக்காக நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய்க்கு வந்ததைப் பேசக் கூடாது. ஒரு விஷயம் தெரிய வந்தால் அதன் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும். தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை ஒருவன் தன் … Read more

கலைஞர்களும் சமூகமும்… (ஜெயமோகன் விவகாரம்)

ஜெயமோகன் பிரச்சினை பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள்.  அது பற்றி நான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பேசினேன்.  பேசியதில் பத்தில் ஒரு பங்கு கூட வரவில்லை.  மேலும், கோவை கண்ணதாசன் விழாவிலும் அது பற்றிக் குறிப்பிட்டேன்.  ஆனாலும் விரிவாக எழுத நேரமில்லை.  பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.  இரண்டு தினங்களுக்கு முன்பு கிங் இன்ஸ்டிட்யூட்டில் போட்டுக் கொண்ட தடுப்பு ஊசி சம்பவமே ஒரு கதைக்கான சரக்கைக் கொண்டது.  இத்தனை வேலைக்கிடையிலும் இந்தப் பிரச்சினை பற்றி எழுதி விடவே தோன்றுகிறது.  … Read more

லீமா (பயணக் குறிப்புகள் – 4)

தென்னமெரிக்க நாடுகளின் கட்டிடங்களில் பயன்படுத்தும் வண்ணங்கள் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துகின்றன.  லீமாவில் உள்ள இந்தக் கட்டிடத்தின் வண்ணங்களைப் பாருங்கள்.

ஆமாஞ்சாமி – 2

என்னிடம் யாரும் மோடி பற்றி ஆதரவாகப் பேசக் கூடாது என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கி்றேன். என்ன இது அராஜகம் என்று நீங்கள் நினைக்கலாம்.  என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால் நீங்களும் இதைத்தான் சொல்வீர்கள்.  காலையில் நாகேஸ்வர ராவ் பூங்கா செல்கிறேனா?  அங்கே போனதும் ஒருவர், பிராமணர் – வயது எண்பதுக்கு மேல் இருக்கும் – என்னை மோடியின் தற்கொலைப் படை என்று நினைத்துக் கொண்டு – நான் ஒரு பிராமண அடிவருடி என்பதால் அப்படி நினைத்திருக்கலாம், அதற்குள் … Read more

கேம் ஓவர்

என்னுடைய வாசகர் வட்டத்தின் உள்ளே நுழைய ஒரு எளிய வழிமுறையைக் கையாளுங்கள் என்றால் ஒருத்தர் கூடக் கேட்பதில்லை. இது பற்றி சுமார் 50 முறையாவது எழுதியிருப்பேன். கொஞ்சமும் பயனில்லை. தொட்டில் பழக்கத்தை விடுவேனா என்கிறார்கள். பச்சை விளக்கு என்றால் போகலாம்; சிவப்பு விளக்கு என்றால் நிற்க வேண்டும் என்ற சாதாரணமான ஒரு விதிமுறை இது.  நான்கு ஐந்து பேர் இருக்கும் சபையில் நீங்கள் மட்டுமே அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் … Read more

பெரூ – பொலிவியா – சீலே (பயணக் குறிப்புகள் – 3)

ஒரு தகவல்: என் தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் பணம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID: charu.nivedita.india@okaxis *** பயணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கும் நிலையில் நான் இன்னுமே பயணத்துக்கு சரியாகத் தயார் செய்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.  உடல்நலத்துக்கு வேண்டிய எல்லாமும் செய்தேன். கடந்த மூன்று மாதமாக தினமும் ஒருவேளை ஏபிசி ஜூஸ் குடித்தேன்.  கேரட், பீட்ரூட், ஆப்பிள் மூன்றையும், அதோடு கொஞ்சம் இஞ்சியையும் தோல் சீவி ஜூஸரில் போட்டு … Read more