மண்

கிடைத்தால் வரம்; கிடைக்கா விட்டால் சாபம்.  தஞ்சாவூர் மாவட்டத்து மண்ணில் பிறந்தவர்களால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும். 62 வயதிலும், ஓடினால் நெஞ்சு வலி என்ற நிலையிலும் பித்தோ இது எனத் தோன்றும் காமம் பொங்கிப் பெருகும் தேகம் தஞ்சை மண்ணுக்கே உரியது. அதிலும் பனிரண்டு மணி நேரப் படிப்பில் தேகம் சுழித்து நுரைக்கிறது.  மதுவையும் விட்ட பிறகு உணர்வுகளை மழுங்க அடிக்க எதுவும் இல்லாத நிலையில்… உணர்வுகள் கூர்மை பெற்று ஓங்கிப் பெருகுகின்றன.  சிருஷ்டிகரமான … Read more

மரண தண்டனை

மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இந்தியா நாகரீகம் அடையவில்லை. ஒரு பெண் தனியாக வெளியே போனாலே ஏழெட்டு பேர் சேர்ந்து வன்கலவி செய்து கொல்லும் அளவுக்கு எதார்த்தத்தைக் கொண்ட இந்த நாட்டில் மரண தண்டனை வேண்டாம் என எப்படிச் சொல்வது?   மிகவும் யோசித்து, மிகவும் திட்டமிட்டு ஒருவரைக் கொலை செய்த ஒரு மனிதனுக்கு இந்தப் பூமியில் வாழ என்ன உரிமை இருக்கிறது?   அதிலும் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் … Read more

ஈரோடு புத்தக விழாவில் அடியேன்…

ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நண்பர்களின் கவனத்துக்கு:  ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் வாசகர்களுக்குக் கையெழுத்து இட்டுத் தருவேன்.   ஈரோடு புத்தகக் கண்காட்சி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. என்னுடைய புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். கிழக்கு பதிப்பகம் – அரங்கு எண் 3 மற்றும் 4 உயிர்மை பதிப்பகம் – அரங்கு எண் 76 மற்றும் 77 நேரம்: … Read more

வெகுஜன உளவியலும் ஃபாஸிஸமும்: ஏவுகணை நாயகன்

கலாம் பற்றிச் சொல்ல இன்னும் அதிகம் இருக்கிறது.  முகநூல் அறிவாளிகளிடம் அதை முன்வைப்பதை விட ஒரு பத்திரிகையிலேயே விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்.  இந்தக் கட்டுரைக்கு வித்திட்டது இன்று காலையில் என்னோடு உரையாடிய இரண்டு ஆட்டோக்காரர்கள்.  ஒரு ஆட்டோக்காரர், ”கலாம் சாருக்கு மெரீனா பீச்சில் சிலை வைக்க வேண்டும் .  ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி கவர்னரிடம் கொடுத்தால் சிலை வைப்பலாங்களா சார்?” என்று கேட்டார்.  “நானும் அதையே தான் நினைத்தேன்.  நீங்கள் சொல்லி விட்டீர்கள். … Read more

விஞ்ஞானி அப்துல் கலாம் உருவாக்கிய இளைஞர் சமுதாயம்!!!

பலவிதமான கொலை மிரட்டல்களும் நான் விரைவில் மரணம் அடைய வேண்டும் என்ற தீவிரமான பிரார்த்தனைகளும் கொண்ட பல மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.  எதிர்பார்த்ததுதான்.  இதற்கெல்லாம் பதற்றம் அடைந்தால் கைகால் நடுங்கும்; நெஞ்சுவலி வரும் என்பதால் சாத்வீகமாக எதிர்கொள்கிறேன்.  இன்று ஒரு நீண்ட கடிதம் வந்தது.  அதன் ஒரு பகுதியை மட்டும் உங்கள் எஞ்ஜாய்மெண்டுக்காகப் பதிவிடுகிறேன்.  இதற்காக எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை.  ஆனால் ஒன்று… இப்படிப்பட்ட கோடானுகோடி இளைஞர்களைத்தான் கலாம் உருவாக்கினார். … Read more

je taime…

ஒன்பது மாத தினசரிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கட்டுரை.  தீபன் என்ற ஃப்ரெஞ்ச் படம் பற்றி என் நண்பர் ஷங்கர் எழுதியது.  அதில் அதன் இயக்குனரின் பெயரைக் குறிப்பிடும்போது ழாக் அடியார்டு என்று எழுதியிருந்தார்.  Jacques Audiard என்பதில் முதலில் Audiard ஐ எடுத்துக் கொள்வோம்.  ஃப்ரெஞ்சிலும் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் t, d என்ற உச்சரிப்புகள் இல்லை.  த்த, த என்பதே அதன் உச்சரிப்பு.  எனவே Audiard என்ற பெயரை ஓதியார் என்று … Read more