நான் ரங்கராஜ் பாண்டேவின் ரசிகன்!

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது எனினும் குழந்தைகளிடம் காணும் ஒரு குணம் என்னிடமும் உண்டு.  அதுதான் வன்முறையை ரசிப்பது. நீங்கள் கவனித்திருக்கலாம், எந்தத் தயக்கமும் இல்லாமல் குழந்தைகள் வன்முறையைக் கைகொட்டி ரசிப்பதை.  நம்மால் எது முடியவில்லையோ அதைத்தானே ரசிக்கிறோம்?  நான் என்னளவில் ஒரு எறும்பைக் கொல்வதைக் கூட பாபம் என எண்ணுபவன். வீட்டில் நுழையும் பூரானைக் கூட அடிக்காமல் தூக்கி வெளியே போட முடியுமா என்றே யோசிப்பேன்.  அப்படிப்பட்ட எனக்கு வன்முறையில் வாழும் தாதாக்களை ரொம்பப் பிடிக்கும்.  சின்ன … Read more

லிங்காத்தாள் குட்டை சந்திப்பு

இப்படிப் பண்ணினதுக்கு நம்மளப் பிஞ்ச செருப்பாலதான் அடிச்சுக்கணும் என்று எப்போதாவது உங்களையே நீங்கள் வைது கொண்டிருக்கிறீர்களா?  சில தினங்கள் முன்பு வாசக நண்பர்களைச் சந்திக்க ஈரோடு அருகில் உள்ள மண்கரடு லிங்காத்தாள் குட்டையில் ஒரு நண்பரின் தோட்டத்திற்குச் சென்றிருந்தேன் அல்லவா? அன்றைய தினம்தான் என்னையே அப்படி வைது கொண்டேன். அந்த நண்பர் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்.  பழகுவதற்கு இனியவர்.  அதனால் அந்தச் சந்திப்புக்கு இசைந்தேன்.   சந்திப்புக்கு வருகிறேன் என்று சொன்ன முக்கியஸ்தர்கள் யாரும் வரவில்லை.  அதில் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – தஞ்சை ப்ரகாஷ்

இந்த வாரம் தஞ்சை ப்ரகாஷ்.  கட்டுரை பற்றி முகநூலில் உமா சக்தி இப்படி எழுதியிருக்கிறார்: தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம், மீனின் சிறகுகள், கள்ளம் இவையே என்னிடம் இருக்கும் அவருடைய ஆக்கங்கள். சாரு எழுதுவதற்கு முன்னர் முதல் தடவையாக இந்தத் தகவல்கள் எல்லாம் ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்தது எழுத்தாளர்கள் மீது நான் வைத்திருக்கும் பேரன்பும் மரியாதையும் காரணமாக இருக்கலாம். தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகளை படித்துவிட்டு இவ்வளவு எராட்டிக்காக எழுதியுள்ளார் என்று கோபப்பட்டு, என் … Read more