சால்சா – அராத்து

வுட்டதைப் புடிச்சிடுவோம் ……. வயதான பிறகும் வாழ்கை இருக்கிறது. நாங்கள் மிஸ் செய்ததையெல்லாம் இப்போது செய்யப்போகிறோம் என்ற அறைகூவல்களை சமீப காலமாக கேட்டுக்கொண்டு உள்ளோம். 70 வயது பாட்டி இப்போதுதான் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதையும் , 75 வயது தாத்தா தற்போதுதான் களறியோ சால்ஸாவோ கற்றுக்க்கொள்வதையும் சிலாகித்து எழுதிய கவர் ஸ்டோரிகளையும் புள்காங்கிதத்தோடு படித்திருப்போம். தாத்தாவும் பாட்டிக்கும் அள்ள அள்ளக் குறையா வாழ்கை இருக்கிறது என்பதோ , எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை. … Read more

கன்னி மேரி கடைசியாய் வாழ்ந்த இடம்…

2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடிலில்தான் மேரி மாதா தனது இறுதிக் காலத்தைக் கழித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது நம் மனக்கண்முன் தோன்றும் காட்சிகளும் வசனங்களும் அதி அற்புதமானவை. அந்தக் குடிலின் எதிரே நான் பல மணி நேரம் அமர்ந்திருந்தேன். யூதர்களுடைய பஸ்கா பண்டிகை சமீபத்திருந்த வேளையில் யேசு ஜெருசலேம் செல்கிறார்.  தேவாலயத்தில் ஆடுகளையும் மாடுகளையும் புறாக்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்போது கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி … Read more

அம்ஷன் குமாருக்கு விருது : தமிழ் ஸ்டுடியோ அருண்

கீழே உள்ள குறிப்பு தமிழ் ஸ்டுடியோ அருண் முகநூலில் எழுதியிருப்பது:   தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கலைஞர்கள்… வெகுஜனத் திரைப்படங்கள் இல்லாத பிரிவில் இந்த முறை மூன்று தமிழர்கள் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். வெகுஜனத் திரைப்படப் பிரிவில் விருது பெற்றவர்களை முன்வைத்து ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களும் முகநூல் நண்பர்களும், பெரும் பதிவுகள் எழுதி குவித்தனர். எங்காவது ஒரு செய்தியாவது இவர்கள் குறித்து வெளியானதா என்றால் இல்லவே இல்லை, பலருக்கும் மூன்று தமிழர்கள் விருது வாங்கியிருக்கிறார்கள் … Read more

எழுச்சி : ஷோபா சக்தியின் சிறுகதை: ஓர் பின்நவீனத்துவ விளக்கம்

சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை ஆகிய நாவல்களைப் பற்றிப் பேசும் போதும், கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதியைப் பற்றிப் பேசும் போதும் புனைவெழுத்தும் பின்நவீனத்துவமும் பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் ஏன் மோசமான கதை என்பதையும் விளக்கினேன்.  நூறு நாற்காலிகளில் தெரிவது வெறும் கண்ணீர்.  துலாபாரம் சினிமா கண்ணீர்.  தமிழ் சினிமாவின் க்ளிசரின் கண்ணீர்.  கண்ணீர்க் கதைகளைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஆனால் அதை … Read more

63 வயதில் சால்ஸா கற்றுக் கொள்வது எப்படி? – அராத்து

நான் போகும் சால்ஸா வகுப்பில் நான் தான் அதிக வயது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு 70 வயதுத் தாத்தாவும் இருக்கிறபடியால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது.  இது பற்றி அராத்து எழுதியதைப் படித்து ரொம்பவே ரசித்தேன்.  என்னைத் தாக்குவது போல் இருக்கிறது என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.  பொதுவான நிலைமையைச் சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நம் வாசகர் வட்டத்தில் சாருவைக் கிண்டலடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டவிதியும் இல்லை. அவருடைய கணினியில் ‘க்’ என்ற … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு. செல்லப்பா : பகுதி 2

பூனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் விஷ்ணு கேஷவ் வாலிங்க்கர் என்ற ஒரு பிராமண பேராசிரியர் கிறித்தவராக மதமாற்றம் செய்யப்படுகிறார். அடுத்தக் காட்சியில் பேராசிரியர் வீட்டுக்கு தாமோதர் சாப்பேகர், பாலகிருஷ்ண சாப்பேகர் என்ற இரண்டு சகோதரர்கள் செல்கிறார்கள். அன்றைய நாள் 31 ஆகஸ்ட் 1896. பேராசிரியர் கிறிஸ்தவ மதத்தின் நன்மைகள் பற்றிச் சொல்லி அவர்கள் இருவரையும் ஆண்ட்ரூஸ் பாதிரியாரிடம் அழைத்துப் போவதாகக் கூறுகிறார். அப்போது வெளியே பெரிய பஜன் சத்தம் கேட்கிறது. ‘இந்து மதமே இப்படித்தான். கிருஷ்ணரின் ஜன்ம … Read more