பழுப்பு நிறப் பக்கங்கள் : சி.சு. செல்லப்பா – 3

செல்லப்பா தன்னுடைய படைப்பிலிருந்து ஒரு பகுதியைப் படிக்க ஆரம்பித்தார். (சுதந்திர தாகம்தான் என்று இப்போது தோன்றுகிறது.) முதுமையின் காரணமாக அவரால் ஒரு வாக்கியத்தைக் கூட சரிவரப் படிக்க முடியவில்லை. அங்கே இருந்த 25 பேரில் ஒருவருக்கும் அவர் படிக்கும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. எல்லோரும் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு (எப்போதுமே களப்பலி அடியேன்தான்!) வேறு யாராவது படிக்கட்டுமே, எங்களுக்கும் புரியும் என்றேன். முடியாது என்று மறுத்துவிட்டு அவரே படித்தார். எல்லோரும் ‘ஙே’. … Read more

என் கஸின் திஹார் ஜெயிலில் இருக்கிறான்…

வளைகுடா நாடுகளில் வசிக்கும் என் நண்பர்களிடம் நீங்கள் வசிக்கும் நாட்டை சுற்றிப் பார்த்தீர்களா என்று கேட்கும் போது எல்லோரும் ஒரே பதிலைத் தருவதையே பார்த்திருக்கிறேன்.  இங்கே பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது? நண்பர்களின் இந்தக் கேள்வியைப் பற்றி இஸ்தாம்பூலில் அபிநயாவை மீண்டும் எதேச்சையாகப் பார்த்த போது யோசிக்க நேர்ந்தது.  ஒரே நிறுவனம், ஒரே இடத்துக்குப் பயணம் என்பதால் முதலில் சந்தித்த பயணிகளையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஊர்களில் சந்தித்துக் கொண்டிருந்தோம்.  என் பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள் வேறு … Read more

ஒரு பழைய புகைப்படம்

புகைப்படத்தில் இருப்பது ஆர். சிவகுமார், அகிலன், கவிஞர் சுகுமாரன்.  பிரம்மராஜன் மீட்சி பத்திரிகையை ஊட்டியிலிருந்து நடத்திக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும்.  முகநூலில் அகிலனின் பக்கத்தில் பார்த்தேன்.  பழைய நினைவுகள் மனதில் கிளர்ந்தன.  நான் எழுத களம் அமைத்துக் கொடுத்த பத்திரிகை மீட்சி.  என் நான்லீனியர் சிறுகதைகளை நல்ல முறையில் அறிமுகப்படுத்தி வெளியிட்டவர் பிரம்மராஜன்.  ஆர். சிவகுமார் எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்.  முப்பது ஆண்டுகள் ஆகியும் மூவரின் முக அமைப்பிலும் துளி மாற்றம் … Read more