லால்குடியில் லா.ச.ரா. பற்றிப் பேச இருக்கிறேன்…

நாளை திருச்சி கிளம்புகிறேன்.  நாளை இரவு திருச்சியில் தங்கல்.  நாளை மறுநாள் ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் லால்குடி வினோபா கல்வி நிலைய வளாகத்தில் லா.ச.ரா. பற்றிப் பேசுகிறேன்.  லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  அவர் ஒரு அபாரமான மனிதர்.  திங்கள் மாலைதான் சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை திரும்புகிறேன்.  இரண்டு தினங்களும் திருச்சியில் என் நண்பன் சுதிர் செந்தில் இல்லாதது எனக்கு வருத்தம்.  வெளியூர் போயிருப்பதாகத் தகவல் அறிந்தேன். … Read more

ஜி. கார்ல் மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள் – ஒரு சிறிய மதிப்புரை

முகநூலில் Sarav Urs எழுதியது: படிக்கிற பழக்கம் குறைஞ்சிடுச்சு… நாளிதழ் எல்லாம் கேக்கவே வேணாம் ஒரே டெம்ப்ளேட் எழுத்துக்கள். அலெர்ஜி. வார இதழ்’ல மனசுக்கு நெருக்கமான ஒன்னு இரண்டு பக்கங்களுக்காக மொத்தத்தையும் உருட்ட வேண்டிய சூழல். கடுப்ஸ். சிறுகதை எல்லாம் பிரியாணிக்கு வச்ச துவையல் மாதிரி ஒட்டவே மாட்டீங்குது. கவிதை எல்லாம் பார்த்தாலே கொலை வெறி வருது. யோசிச்சு பார்த்தால் காமிக்ஸ், வரலாறு, க்ரைம், அரசியல் கட்டுரைகள் மட்டுமே பிடிச்சிருக்கு. இதுல ஃபேஸ்புக் ரொம்ப சௌகர்யம். பிடிக்கலைன்னா … Read more

புத்தகக் கண்காட்சி

சென்னை பெரியார் திடலில் இன்று முதல் ஞாயிறு வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. 50% தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்கும். உயிர்மை அரங்கில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும்.