பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 8

விமரிசனம் தவிர்த்து செல்லப்பா செய்த மற்ற இரண்டு காரியங்கள் தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கக் கூடியவை. புனைகதையில் அவர் செய்த சாதனைகளைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன். பண்டிதர்களுக்கும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும், ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் எதிராக ஒற்றை மனிதராக, கிட்டத்தட்ட ஒரு கெரில்லா போராளியைப் போல் போராடியிருக்கிறார் செல்லப்பா. அந்த வகையில் இன்றைய தினம் இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அந்த மகத்தான மனிதருக்கே கடமைப்பட்டிருக்கிறார்கள். ‘எழுத்து’ என்ற பத்திரிகை மூலம் அவர்தான் சமகால இலக்கியத்துக்கான … Read more