சீமானுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சகோதரர் சீமான் அவர்களுக்கு,      வணக்கம். இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதும் காணம், நீங்கள் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து தனித்து இருக்கிறீர்கள் என்பதுதான். முக்கியமாக எந்தப் பெரிய கட்சியுடனும் நீங்கள் சேரவில்லை. சேர்ந்திருந்தால் நாலைந்து சட்டசபை உறுப்பினர்களோடு கணக்கைத் துவக்கியிருக்கலாம். மேலும், உங்கள் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருந்தது. ஆனால், உங்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையில் சில ஆபத்தான அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்பது அதில் … Read more

நிலவு தேயாத தேசம் – 29

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகி விட்டன.  மேற்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அந்த மனநிலையிலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டன.  இன்றைய தினம் தேசியவாதம், தேசப் பற்று போன்ற வார்த்தைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனித குலத்துக்கு விரோதமான கருத்துருவங்களாகக் கருதப்படுகின்றன; அவற்றை ஹிட்லரின் தேச பக்தி என்ற சித்தாந்தத்தோடு தவிர்க்க முடியாமல் சம்பந்தப்படுத்தி மனம் நடுங்குகிறார்கள்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்  நிலைமை அப்படி இல்லை.  … Read more

சண்முகம் மாமாவும் குட்லியும்… (சிறுகதை)

வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம்… மேற்கண்ட ஐந்து நற்குணங்களும் என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிடையாது.  ஏன் என்றெல்லாம் யோசித்ததில்லை.  இதனால் எனக்குப் பல வழிகளிலும் லாபமாக இருந்ததால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.  ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு.  என் எழுத்தை மட்டமாகப் பேசுபவர்களை மட்டும் என் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விடுவேன்.  அவ்வளவுதான்.  அவ்வளவேதான்.  அவர்களோடு பகைமை பாராட்டுவதோ திட்டுவதோ எல்லாம் கிடையாது.  விலகி விடுவேன்.  நமக்கு எழுத்துதான் வாழ்க்கை, உயிர், … Read more