Book Unfair!

எதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது முதுமொழி.  எல்லாரையும் போல் எல்லாவற்றையும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க எழுத்தாளன் எதற்கு?  அதை விட கவர்மெண்டில் குமாஸ்தாவாகவே இருந்திருக்கலாமே?  பாரதியும் வெகுஜன விரோதிதான்.  அவன் காலத்தில் அவன் வாங்காத ஏச்சா, பேச்சா?  இந்த ஏச்சுப் பேச்சுக்கெல்லாம் பயந்து கொண்டு எல்லாவற்றையும் பாராட்டிக் கொண்டிருந்தால் நான் எழுத்தாளன் அல்ல.  தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டும் கூட ஓரான் பாமுக் என்ன சொன்னார்?  அதுதான் எழுத்தாளனின் வேலை.  உங்களுக்கு முதுகு சொறிந்து விடவும் … Read more

தகரக் கொட்டகை புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு ஆதரவான பேட்டி

சென்னை தீவுத்திடலில் ஒரு தகரக் கொட்டகை போட்டு தகரம் வெளியே தெரியாமல் பெரிய வெள்ளைப் படுதாவில் மூடி ஒரு புத்தகக் கண்காட்சி நடந்து இன்று முடிய இருக்கிறது அல்லவா, அது பற்றி பிரபு காளிதாஸ் கொடுத்த பேட்டி கீழே.  என்னைப் போல் திட்டாமல் நல்ல மாதிரியே கொடுத்திருக்கிறார்.  பொதுவாகவே யாரும் யாரையும் அவர் இவர் என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவாகத் தெரியும் எனக்கு.  ”கார்த்திக், அப்பா வந்துட்டாரா பாரு” என்று அவந்திகா சொன்னால், ஏன் அவுரு இவுருன்னு … Read more

மொழிபெயர்ப்பு

ஒரு பெரிய மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் அந்திமழையில் நிலவு தேயாத தேசம் முடிவதற்கு இன்னும் இரண்டு அத்தியாயங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அப்படியே நிற்கிறது.  இந்த மொழிபெயர்ப்பு வேலை அவசரம்.  தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் ரொம்பவும் சொதப்புகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நான் படித்த ஆண்டாள் மொழிபெயர்ப்பில் பல முக்கியமான விடுபடல்கள் இருந்தன.  ஒரு பாசுரத்தின் அடிச்சரடான விஷயமே காணவில்லை.  அர்ச்சனா வெங்கடேசனின் The Secret Garland என்ற நூல்தான் அது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிய … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 1)

நான் கும்பகோணம் சென்றதில்லை. ஒருமுறை அங்கே சென்று அந்தப் பிள்ளையார் கோவில் தெருவை தரிசித்து வரலாம் போல் இருக்கிறது. அந்தத் தெருவில்தானே கு.ப.ரா.வும் பிச்சமூர்த்தியும் புழங்கியிருப்பார்கள். பிச்சமூர்த்தி கு.ப.ரா.வை விட இரண்டு வயது மூத்தவர். தி. ஜானகிராமனும் எம்.வி. வெங்கட்ராமும் அந்த இரட்டையரை விட பதினெட்டு பத்தொன்பது வயது இளையவர்கள். அடுத்த தலைமுறை. ஆனாலும் பழகியிருக்கிறார்கள். அவர்களும் அந்தப் பிள்ளையார் கோவில் தெருவில் நடந்திருப்பார்கள் மேலும் படிக்க: http://bit.ly/1VTscmr