பிளாக் நம்பர் 27, திர்லோக்புரி

தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ஒரு வீட்டில் வீட்டுக்காரர் தீவிர ராமபக்தர். குளிர்காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ராமபஜனை. குளிர்காலமாக இருப்பதால் கண்ணாடி ஜன்னல்களெல்லாம் மூடியிருக்கும். வீட்டுக்காரர் தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தும் ‘ஓம் ஜெய ஜெகதீச ஹரி! … Read more

அந்நியன் – 2

முன்பு போல் இருந்திருந்தால் அயோக்கியத்தனம், கயவாளித்தனம் என்றெல்லாம் எழுதியிருப்பேன்.  இப்போது எல்லாவற்றையும் கடவுளிடம் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறேன்.  என்றைக்கு இருந்தாலும் திலீப்குமார் செய்த அதர்மமான காரியத்துக்கு அவர் இறைவனிடம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.  ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பாலமாக விளங்கும் தமிழ் இலக்கிய தாதாக்களில் ஒருவரான திலீப்குமார் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியான The Tamil Story என்ற தலையணை சைஸ் தொகுப்பில் சி.என். அண்ணாதுரையின் சிறுகதையைக் கூட தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  சி.என். அண்ணாதுரையை விட நான் … Read more