சினிமாவும் இலக்கியமும் – சாரு நிவேதிதாவுடன் ஒரு கலந்துரையாடல்

நண்பர்களே! தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன, என்பது போன்ற விவாதங்கள் நடைபெறும். சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சாரு நிவேதிதாவுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக. நாள்: டிசம்பர் 3, 2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு. … Read more

செல்லாப் பணம் : ஒரு முக்கியமான கட்டுரை

செல்லாப் பணம் குறித்த ஒரு முக்கியமான கட்டுரையைப் படித்தேன். எழுதியவர் ஷங்கர் கோபாலகிருஷ்ணன். இந்த விஷயத்தில் கார்ல் மார்க்ஸ் போன்ற என் நண்பர்களே ஏதோ நல்லது நடக்கப் போவதாக கனவுலகத்தில் மிதந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.  ஸ்க்ராலில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.  தமிழாக்கம் செய்தவர் Shahjahan R. பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி (ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்) பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது … Read more

புஞ்சை புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி

விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ‘புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2016’ நாளை துவங்குகிறது. புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாளை துவங்கி 27-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு துவங்கும் புத்தகத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி மக்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். தேவிபாரதி மற்றும் … Read more