ஃபாஸிஸம் + கோமாளித்தனம்

மாதவராஜ் முகநூலில் எழுதியது: வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் … Read more

கடவுள் இருக்காண்டா கொமாரு…

முகநூலில் பிரபு காளிதாஸின் செயல்பாடுகள் பற்றிப் பலவிதமான குற்றச்சாட்டுகள்.  ’பாத்து சூதனமா நடந்துக்க, இப்டியே போனா சாரு மாதிரி ஒன்னும்லாமப் போய்டுவே’ என்று கூட தலைவர் சொன்னதாகச் சொன்னார்.  ஆனாலும் நடவடிக்கைகளில் ஒன்றும் மாற்றம் இல்லை.  யாராவது அவருடைய அட்டையைத் திட்டினால், டாய்ங்… இருடா ஒன்ன வீடு தேடி வந்து போட்றேன்… என்ற மாதிரியான முகநூல் பதிவுகள்.  ஆனால் நேர்வாழ்வில் அவர் வள்ளலார் மாதிரி ஆள் என்று சொன்னால் ஒரு பயல் நம்ப மாட்டேன் என்கிறான்.  எல்லோருமே … Read more

சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு – இன்று மாலை

நண்பர்களே! தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன, என்பது போன்ற விவாதங்கள் நடைபெறும். சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சாரு நிவேதிதாவுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக. நாள்: டிசம்பர் 3, 2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு. … Read more