அண்ணன் தம்பி

அண்ணன் தம்பி சண்டையில் தலைவர் எவ்வளவு மன உளைச்சலை அடைந்திருப்பார் என்று இப்போதுதான் புரிகிறது. கடந்த ஒரு வாரமாக என் பையன்களுக்கு இடையே நடக்கும் அடிதடி சண்டையில் என் மனம் எவ்வளவு வலிக்கிறது தெரியுமா? அண்ணனை விட தம்பி கொஞ்சம் சாந்தமானவன், அறிஞனும் கூட. உன் அண்ணன் தானேடா, கொஞ்சம் விட்டுக் கொடு என்றேன். அந்தப் பொறுக்கியை இப்படி ஆக்கினதே நீ தானே, அதனால் தான் அவனுக்குப் பரிந்து கொண்டு வருகிறாய் என்று எனக்குத் திட்டு. அண்ணனிடம் … Read more

கார்ல் மார்க்ஸ்

சிலருக்குத்தான் பெயர் பொருத்தமாக அமைகிறது.  எனக்கு அறிவழகன் என்று பெயர் வைத்தார்கள்.  அறிவும் இல்லை; அழகும் இல்லை.  ஆனால் கார்ல் மார்க்ஸுக்கு பெயர் பொருத்தமாக அமைந்து விட்டது.  எவ்வளவு அறிவாக எழுதியிருக்கிறார் பாருங்கள். *** கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருப்பது: இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நடந்துவிடும் என்பதற்கான சமிஞ்ஞைகள் தெரிகின்றன. உடனே அதை விட அதிகமான ஒலியுடன் அற்பக் கூச்சல் ஒன்றும் மேலெழுந்து வருகிறது. அதன் வடிவத்தில் ஒன்றுதான் ‘புத்தகத்துக்கான ப்ரோமோ’ எனும் சத்தம். ஒரு … Read more

சல்மானும் கணியன் பூங்குன்றனும்…

மீனா என்பவர் எழுதிய இந்தப் பதிவையும் சல்மானின் நேர்காணலையும் கார்ல் மார்க்ஸ் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அதை அப்படியே கீழே தருகிறேன்.  இதன் ஒவ்வொரு வார்த்தையோடு நான் உடன்படுகிறேன்.  பெரியாரும் இதே கருத்தைத்தான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.  தேசாபிமானம், குலாபிமானம், பாஷாபிமானம் கூடாது என்பது பெரியார் கொள்கை.  2000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியிருக்கிறான்.  இது பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறப்பிரிகை என்ற பத்திரிகையில் பலவிதமான விவாதங்கள் நடந்திருக்கின்றன.  … Read more