எழுத்தாளனின் மரணம்

எழுத்தாளனின் மரணம் மனுஷ்ய புத்திரனின் புத்தம் புதிய கவிதை …………… சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அருவிகரையோரத்தில் வைத்து என்னிடம் கோட்பாட்டாளன் ஒருவன் நல்ல போதையில் நிதானமாக சொன்னான் ” ஆசிரியன் இறந்துவிட்டான்” நான் அப்போது மிகவும் இளைஞனாக இருந்தேன் அப்போதுதான் எழுதத்தொடங்கியிருந்தேன் ” எந்த ஆசிரியன்?” என்றேன் பயத்துடன் ” எல்லா ஆசிரியர்களும்தான்” என்றபோது எனது பயம் அதிகரித்துவிட்டது ” நானுமா?” என்று ஒரு பேய்வீட்டிற்குள் இருந்து கேட்பதுபோல கேட்டேன் ” சந்தேகமே இல்லாமல்” … Read more

அதிகம் கேட்ட பாடல்

நீங்கள் இதுவரை அதிகம் கேட்ட பாடல் எது? சுப்ரமணி, சென்னை எத்தனை முறை என்று கணக்கே பார்க்க முடியாது.  தினமுமே ஏழெட்டு முறை. அதை 365-ஆல் பெருக்கி, வரும் தொகையைப் பனிரண்டால் பெருக்கிக் கொள்ள வேண்டும்.  2005-இல் வெளியான ஆல்பம்.  சிறு வயதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்களை விட இந்தப் பாடலைத்தான் அதிக முறை கேட்டிருப்பேன்.  இந்தப் பாடலில் தெரியும் passion, madness-ஐ என் எழுத்தில் கொண்டு வந்து விட்டால் அது போதும். இதே ஆல்பத்தில் வரும் … Read more

மக்கள் மன்றம்

தந்தி டிவியின் மக்கள் மன்றம். இடம்: திருப்பூர். தலைப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பு நிரந்தர வெற்றியா, தற்காலிக வெற்றியா? நாள்: 26.2.17 பகுதி 2-இல் ஏழாம் நிமிடத்தில் இருந்து பார்க்கவும். பகுதி 1: https://www.youtube.com/watch?v=hFMt0YGi63I பகுதி 2: https://www.youtube.com/watch?v=G05crHW8v28 பகுதி 3: https://www.youtube.com/watch?v=_l9yeV4-iLA

இன்னும் அழகிய உலகில்…

நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு நடக்கும் போது பேச்சில் ஆண்டாளும் வரும், லிங்கனும் வருவார், ஸ்டாலின் கருணாநிதி போன்றவர்களும் வந்து போவர். அநேகமாக ஜெயமோகன் பற்றி இரண்டு தினங்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் சொல்வேன். நான் சொல்வதைக் கேட்டு விட்டு, “இதெல்லாம் அவருக்குத் தெரியுமா?” என்றார் ஒருநாள். ம்ஹும். வாய்ப்பில்லை என்றேன். அப்படித்தான் நேற்று ஜெ. பற்றிப் பேச்சு வந்தது. அவர் ஏன் அப்படி ஆக்ரோஷமாக எழுதுகிறார். அவரால் விமர்சிக்கப்படுபவருக்கு ஜன்னி வந்து விடும் … Read more