தடம் மற்றும் உயிர்மை

இம்மாத விகடன் தடத்தில் தன் அடுத்த நாவல் பற்றி சாரு நிவேதிதாவின் கட்டுரை வந்துள்ளது. இம்மாத உயிர்மையில் அசோகமித்திரன் பற்றி ‘கடவுளால் கைவிடப்பட்ட உலகின் கலைஞன்’ என்ற கட்டுரை வந்துள்ளது. நண்பர்கள் படிக்கவும். – ஸ்ரீராம்

சைத்தான்

நீங்கள் பேய் பிசாசை நம்பாவிட்டாலும் பரவாயில்லை, இதைக் கேளுங்கள். ஒரு ஆள் தமிழ்நாட்டில் ஸ்தூல உருவத்திலும் ஆவி ரூபத்திலும் உலவிக் கொண்டிருக்கிறார். அதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் நான் அவரை அடிக்கடி சைத்தான் என்று அழைத்து வருகிறேன். இன்று கவிக்கோ மன்றத்தில் நடந்த அசோகமித்திரனின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் பேசிய பெண் எழுத்தாளர் ஒருவர் பேசி முடித்து முத்தாய்ப்பாக, “மனுஷ்ய புத்திரன் மறைந்து விட்டாலும் அவர் எழுத்துக்கள் என்றென்றும் நம் மனதில் நிற்கும்” என்றார். இப்போது மேலிருந்து படியுங்கள்.