அசோகமித்திரன் குறித்த சர்ச்சை

27.3.17 அசோகமித்திரனின் வறுமை குறித்து எழுதினால் அவரது புதல்வர்களும் குடும்பத்தாரும் வருத்தப்படுகிறார்கள்; அதை மறுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.  இன்று அவருடைய புதல்வர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.  உயர் நடுத்தர வர்க்கத்தினராக மாறியிருக்கிறார்கள்.  ஆனால் நான் எண்பதுகளில் அவரை தி.நகரில் பார்த்த போது மருந்து மாத்திரை வாங்கக் கூட காசு இல்லாமல் இருப்பதாகச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் அதில் கொஞ்சமும் சுய இரக்கம் இருக்காது.  யாருக்கோ நடந்ததைச் சொல்வது போல் சொல்வார்.  ஆஸ்துமா பிரச்சினையால் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். … Read more

ஞாயிற்றுக்கிழமை மாலை

குடியை நிறுத்திய பிறகு – எப்போது நிறுத்தினேன் என்று ஞாபகம் இல்லாத அளவுக்கு நீண்ட காலம் ஆகி விட்டது – நாம் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவரை நிரந்தரமாகப் பிரிந்து வாழும் தனிமையை உணர்கிறேன். குடியோடு வாழ்ந்த போது ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ரெமி மார்ட்டின் அல்லது ஃப்ரெஞ்ச் வைன் அல்லது அபிஸிந்த் போன்றவற்றோடு கழியும். இப்போது அது கடந்த காலம். மேலும், என்னைப் போன்ற முழுநேர எழுத்தாளனுக்கு – எத்தனை அபத்தமான பிரயோகம் முழுநேர எழுத்தாளன், … Read more