ஃபாசிசம் : கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருப்பது: இந்தத் தடை விவகாரத்தில், இது என்ன மாதிரி விளைவுகளை, உரையாடல்களை சமூகத்தளத்தில் ஏற்படுத்துகிறது என பிஜேபி சோதனை செய்துபார்க்கிறது. ஆக, புதிய நெறிமுறைகள் என்ற பெயரில் மறைமுகமாக இந்த தடை அறிவிக்கப்பட்டவுடன் இங்கு நிகழத் தொடங்கிய உரையாடல்கள் என்ன என்று பார்க்கலாம். முதலாவதாக அரசு எதை பேசலாம் எதைப் பேசக்கூடாது என்கிற நவீன அரசியலின் அடிப்படையை அறியாதவர்க்ள் ‘வேத காலத்திலேய பசுவைப் புசிப்பது இருந்தது…’ என்று உளறத்தொடங்கியது. இரண்டாவது ‘அதில் கொழுப்பு … Read more

ஃபாசிசம்

மக்கள் கூட்டம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்கும் ஃபாஸிஸ்டுகளைப் பற்றி ஜெகதீஷ் முகநூலில் எழுதியிருப்பது: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம்/விலையை கண்காணிப்பது என்பது ‘மக்களின் நலனுக்காக‌ ஆட்சி’ செய்யும் எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம்தான். நான் பார்த்த வரையில் இந்தியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் இந்த கண்காணிப்பு ஆத்மார்த்தமாக நடைபெறுகிறது. உதாரணத்துக்கு இங்கு அரேபியாவில் அடிப்படை அத்தியாவசிய உணவுப் பொருளான ரொட்டி மாவு விலையை அரசு கண்காணிக்கிறது. முழுவ‌தும் இறக்குமதியை நம்பி இருக்கும் நாடு … Read more

அடியேனைப் பற்றி…

என்னைப் பற்றி என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்? என் எழுத்து பற்றி அவர்களின் அபிப்பிராயம் என்ன?  இது பற்றி அவர்கள் எழுதித் தருவதைத் தொகுக்கலாம் என்று டாக்டர் ஸ்ரீராம் ஒரு திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.  எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் என்று பலரிடமும் கேட்டிருக்கிறார்.  அவர்களும் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.   இப்போது நீங்கள் பார்க்கும் எஸ்.ரா. இருக்கும் இடம் வேறு.  ரஜினியோடு திருப்பதி வெங்கடஜலபதி சந்நிதியில் எஸ்.ரா.வைப் பார்த்தேன்.  ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் மைலாப்பூரில் … Read more

எக்ஸைல் நாவலை வாசிப்பது எப்படி?

சற்று முன்பு தான் என் நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  மோடியின் பாஸிஸ உத்தரவுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  என்னைப் போலவே அவருக்கும் பசு தெய்வம்.  பசுவையோ காளையையோ கொல்வதை கற்பனையில் கூட நினைக்க முடியாத மெல்லிதயம் கொண்டவர்கள் நாங்கள்.  பசுவும் காளையும் எங்களுக்கு எங்கள் அம்மா மாதிரி.  அம்மாவை யாராவது கொன்று தின்ன முடியுமா என்றெல்லாம் நாங்கள் கேட்பதுண்டு.  ஆனால் எங்களுக்குத்தான் அம்மா.  மற்ற பலருக்கு அது உணவு.  அப்படியிருக்கும் போது என் நம்பிக்கையை அவர்கள் … Read more

நாடோடியின் நாட்குறிப்புகள் – 28

ஹிட்லரின் ஃபாசிசம் யூதர்களை வதை முகாம்களுக்கு அனுப்பிக் கொன்றது. இப்போது போரின் முறை மாறியிருக்கிறது அல்லவா? எனவே, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்குவதுதான் இப்போதைய போர்முறை. மோடியின் பண உபயோகத்தைக் குறைத்த திட்டத்தினால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். பணக்காரர்கள் அதனால் ஒருசிறிதும் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான பணம் சென்னையிலிருந்து தில்லிக்குப் போயிருக்காது. அதேபோல், இப்பொதைய பசுவதைத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்படுவதும் தலித் மக்களும் முஸ்லீம்களும்தான். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/05/29/1495996204