ஜெய் பாகுபலி : கார்ல் மார்க்ஸ்

30.04.2017 கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியது: ராணி நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். சாவில் மர்மம் இருப்பதாக மக்கள் முணுமுணுக்கிறார்கள். ராணியின் தோழியை தனிமைச் சிறையிலடைக்கிறான் எதிரி நாட்டு மன்னன். ஆளற்றுக் கிடக்கும் அரண்மனையின் காவலாளியை அடித்துக் கொல்கிறார்கள் கள்வர்கள். போகும் வழியில் அவர்களும் ரத்த வெள்ளத்தில் இறக்கிறார்கள். மந்திரிசபையில் இருந்தவர்கள் துரோகிகளாக மாறுகிறார்கள். நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. அந்த வருடம் வெய்யிலின் உக்கிரம் கூடிக்கொண்டே போகிறது. தென்னைகள் கருகி, தாகம் தாங்காமல் மரித்த கால்நடைகளின் மீது வீழ்கின்றன… ஜெய் பாகுபலி!!! … Read more

பாகுபலி – 2

30.4.17 இதையே எனது பாகுபலி 2 விமர்சனமாகக் கொள்ளவும். நல்லவேளை, நான் எழுதியிருந்தால் நிறைய கெட்ட வார்த்தைகள் சேர்த்திருப்பேன். ராஜேஷ் நல்லவர், கனவான். எனவே அதையே இங்கு கொடுக்கிறேன். http://karundhel.com/2017/04/baahubali-2-the-conclusion-2017-tamil-telugu.html

நல்ல பிள்ளை கெட்ட பிள்ளை

28.4.17 ஒரு தாய். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளை குடிகாரன், ஸ்த்ரீலோலன், அடிக்கடி வம்பு தும்பு செய்து பெண்களிடம் அடி வாங்குபவன். ஊரில் ஒருத்தரிடம் கூட நல்ல பேர் கிடையாது. பார்க்க நன்றாகத்தான் இருப்பான். ஆனால் கொனஷ்டையான ஆடை அணிகலன்களால் தன்னை ஒரு பொறுக்கி போல் காட்டிக் கொள்வான். இளையவனும் குடிகாரன் தான், ஸ்த்ரீலோலன் தான். ஆனால் அவன் அப்படி இருப்பது யாருக்கும் தெரியாது. யாருக்குமே தெரியாது. எப்போதும் பெண்களிடம் நல்ல பேர். ஊரிடமும் நல்ல … Read more

மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கீரை வடை…

26.04.2017 தினமும் பத்தரைக்குள் படுத்து காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவது வழக்கம்.  ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும்.  நேற்று நண்பர் ராம்ஜியுடன் எம்சிசியில் சந்திப்பு.  மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்பில் உள்ள உணவகத்தில் உள்ள ருசி சென்னையில் வேறு எங்குமே இல்லை என்பது என் கருத்து.  ஆனால் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. நான் இப்போது பத்திய உணவையே உண்டு வருகிறேன்.  காலையில் கஞ்சி.  மதியம் சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்ற தானியம் … Read more