the discreet hero

mario vargas llosa எழுதிய the discreet hero என்ற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மை காட். ஒரு ஆள் எப்படி வாழ்நாள் பூராவும் சுவாரசியமாகவே எழுதிக் கொண்டிருப்பான். தமிழில் சுஜாதாவின் எழுத்து தான் சுவாரசியத்துக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கும். ஆனால் யோசா சுஜாதாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் என்று தோன்றுகிறது. நாவலில் வரும் 80 வயது இஸ்மாயில் தன் நண்பன் ரிகபர்த்தோவிடம் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நீ தான் சாட்சிக் கையெழுத்துப் போட … Read more

கார்த்திக் – அனு திருமணம்

மும்பையில் நடந்த கார்த்திக் – அனு திருமணத்துக்கு நேரில் வந்திருந்த அருணாசலம், உயிரெழுத்து செந்தில், ராமசுப்ரமணியன், காயத்ரி, ராம்ஜி, ஆனந்த், சத்யமூர்த்தி, அவந்திகாவின் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.  சென்னை வரவேற்பு பற்றி எழுத வேண்டும்.  

Luis Fonsi

லூயிஸ் ஃபோன்ஸி. எனக்குப் பிடித்த தென்னமெரிக்கப் பாடகர். புவெர்த்தோ ரிக்கோவைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி மரியோ பர்கஸ் யோசாவின் நாவல் ஒன்றில் படித்தேன். உடனே பிடித்து விட்டேன். https://www.youtube.com/watch?v=kJQP7kiw5Fk