தேசியவாதம்: ஒரு விசாரணை : நிர்மல் (அ) ம்ரின்ஸோ

உண்மையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.  நம்முடைய வாசகர் வட்டத்திலிருந்து இத்தனை பேர் எழுதுகிறார்களா என்று.  மதியம் நிர்மல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.  நான் அப்போது சினிமாவில் இருந்தேன்.  இப்போது அழைக்கச் சொன்னேன்.  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள் என்றார்.  தயவுசெய்து உங்கள் ப்ளாகில் எடுத்துப் போட்டு விடாதீர்கள் என்றார்.  ஏன் என்றேன் ஆச்சரியத்துடன்.  கூச்சமாக இருக்கிறது என்று பதில் வந்தது.  ஆனால் இந்தக் கட்டுரை தினமலரிலோ தமிழ் இந்துவிலோ இரண்டு மூன்று தினங்கள் தொடராக வந்திருக்க … Read more

புத்தகக் கடல்

சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள புத்தக விநியோகஸ்தர் அலுவலகம் பற்றி பல நண்பர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் பெயர் India Book Distributors. IBD என்று சுருக்கமாக அழைப்போம். இன்றும் நானும் ராம்ஜியும் போய் பல புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தோம். என்னென்ன என்று நாளை எழுதுகிறேன். அவர்களின் வேலை நேரம்:  காலை பத்திலிருந்து மாலை ஐந்து வரை.  சனிக்கிழமை அரை நாள்.  முகவரி: +(91)-44-42012213, 42012214, 42012215, 42012216, 42012212 No 571 Kamaraja Bhavan … Read more

ஒரு கிடாயின் கருணை மனு

அராத்து சிபாரிசு செய்ததால் ஒரு கிடாயின் கருணை மனு பார்த்தேன். படம் துளிக்கூட கவரவில்லை. வசனம் அபாரமாக இருந்தது என்றாலும் பல காட்சிகள் சலிப்பூட்டக் கூடியதாக இருந்தன. திரைக்கதையை இன்னும் இறுக்கிக் கட்டியிருக்கலாமோ? கதையை இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம். ஹீரோ, ஹீரோயின், காமெடியன், டூயட், ஃபைட் என்ற ஃபார்முலா இல்லாததே ஒரு படத்தை நல்ல படமாக ஆக்கி விடாது. முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழிவு திவசத்த களி படத்தில் என்ன கதை இருக்கிறது? … Read more

ஃப்ரான்ஸும் நானும் – 7

பசி கடவுளின் அருளைப் பெற்றது. பசியைப் பேசுபவன் ஞானி. பசியைப் போக்குபவன் வள்ளல். சமூகம் அவர்களைப் போற்றுகிறது. ஆனால் காமம் தீர்ப்பவள் வேசி. அவள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாள். இப்படியாக, ஆண்டாண்டு காலமாக காமத்திற்கு ஒரு சாபம் இருந்து வருகிறது. பசியை எழுதுபவன் கொண்டாடப்படுகிறான்; காமத்தை எழுதுபவன் கல்லடிபடுகிறான். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/05/1496601017 ‘Oedipus the King’ இணைப்பு: http://abs.kafkas.edu.tr/upload/225/Oedipus_the_King_Full_Text.pdf