ஒரு பெண்ணின் டயரி

முகநூலில் படித்த ஒரு பெண்ணின் டயரி.  எழுதியவர் லுலு தேவ ஜம்லா குளிக்காத கழுதைகள்* நேத்திக்கு ஆப்பீஸ் லிஃப்ட்டுக்குள்ள ஏறினா, கருமம் ஒரே நாத்தம்… அப்டியே குடலை புரட்டிகிட்டு வந்திச்சு… ஏன்னா லிப்டுக்குள்ள ஒரு குளிக்காத கும்பல் நின்னுகிட்டிருந்திச்சி… லிஃப்ட்டை விட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தான் மூச்சே விட்டேன்! அப்பதான் எனக்கு இத பத்தி எழுதினா என்னன்னு தோணிச்சி… இங்க பழங்குடியின மக்கள் பலரும் வீடுகள்ள குடியிருக்காம ஊரு ஊரா அலைஞ்சிகிட்டே இருப்பாங்க… நம்ம ஊர் நாடோடிகள் … Read more

பிக் பாஸ்

நேற்று பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். விமானத்திலும் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த போதும் பிக் பாஸ் போடவில்லை. இப்படி பார்க்க முடியாமல் போகும் எபிசோடுகளை மறுநாள் யூட்யூபில் பார்க்கும் வசதியும் இல்லை. இன்று காலைதான் கேள்விப்பட்டேன், ஓவியா மழையில் நடனம் ஆடினார் என்று. கவிஞர் சினேகனையும் ஆட அழைத்ததாகவும் அவர் ஏற்கனவே நான் குளித்து விட்டேனே என்று மறுத்ததாகவும் அறிந்தேன். அடப் பாவி, மழையையும் மங்கையையும் மறுக்கத் துணியும் இவரெல்லாம் ஒரு கவிஞரா? அல்லது, மனைவிக்கு பயமா? … Read more

ஒரு எழுத்தாளனின் சபதம்: தமிழ்ப் பிரபா

முகநூலில் 5.6.17 அன்று தமிழ்ப் பிரபா எழுதியது: ஓரிரு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரொருவர் போனமாதம் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய திருமணச் செய்தியைச் சொல்லி, கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன தேதியையும், இடத்தையும் சுயவிசாரணை செய்து “வர ட்ரை பண்றங்க’ என்றதும் உரிமையாக மறுத்தவர், கண்டிப்பாக நான் வர வேண்டுமென்றார். திருமண மேடையிலேயே உப நிகழ்ச்சியாக தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கப்போகும் NGO’வின் ஆரம்ப விழா, விவசாயிகளுக்கான துயர்நிவாரணம் அளித்தல், … Read more

சாருவும் நானும்: லைலா எக்ஸ்

ஸ்ரீராம் தொகுத்துக்கொண்டிருக்கும், என்னைப் பற்றிய நண்பர்களின் கருத்துத் தொகுப்பு நூலுக்கு லைலா எக்ஸ் எழுதியுள்ள கட்டுரை இது. பல சமயங்களில் நான் எழுதியிருக்கிறேன். “எனக்கு உங்கள் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.  ஆனால், புனைகதைகள்….” என்று சொல்லி அசிங்கமாக சிரிக்கும் பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்.  எந்த ஒரு ஐரோப்பிய எழுத்தாளனும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இப்படி கட்டுரைகள் எழுதி வீணடித்துக் கொண்டிருக்க மாட்டான்.  உம்பர்த்தோ எக்கோ போன்றவர்களை நான் எழுத்தாளனாக கருதுவதில்லை.  அவர்கள் பல்கலைக் கழக அறிஞர்கள். … Read more