விவேகம் சர்ச்சை – 5

விவேகம் பிரச்சினை பெரிய பிரச்சினையாகப் போகும் போல் இருக்கிறது. படம் கபாலியை விட பெரிய வசூல் என்று தெரிகிறது. அப்படியென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே? ஏன் அந்தப் படத்தை விமர்சிப்பவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுகிறார்கள்? இதில் ஒருவர் சினிமா என்பது குழந்தை பெறுவது போல. பிறந்த குழந்தையை யாராவது திட்டுவார்களா என்கிறார். அப்படியானால் தமிழில் வெளிவந்துள்ள எல்லா படங்களுமே குழந்தைதான். எதையுமே விமர்சிக்கக் கூடாது. எழுத்தாளர்கள் எழுதும் எல்லா கதைகளுமே குழந்தைதான். எந்தக் கதையையும் யாரும் … Read more

விவேகம் – கொலை மிரட்டல்

இன்று (26.8.2017) 1.22 மணிக்கு எனக்குத் தெரியாத நம்பரிலிருந்து ஒருவர் போன் செய்து என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆபாசமாகத் திட்டினார். விவேகம் படத்துக்கு நீ யார்ரா பு…. என்று ஆரம்பித்துத் தொடர்ந்தது வசை. கட் பண்ணி விட்டு அந்த எண்ணை ப்ளாக் செய்தேன். உடனே இரண்டு நிமிடத்தில் இன்னொரு எண்ணிலிருந்து போன் செய்து கொலை மிரட்டல் விட்டார். கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்ய எனக்கு நேரம் இல்லை. அருண் வைத்தியநாதன் … Read more

விவேகம் சர்ச்சை – 3

விவேகம் பற்றிய என் விமர்சனத்துக்கு எழுதப்படும் பின்னூட்டங்களைப் படிக்காதீர்கள்;  மன உளைச்சலாகி விடும் என்றார் என் நண்பர்.  அதெல்லாம் மனநோயாளிகளின் பிதற்றல்.  அந்தப் பிதற்றல் எல்லாமே வலியால் ஏற்படுவது.  நானோ சமூக நோய் பற்றி ஆய்வு செய்யும் ஒரு மருத்துவன்.  நோயாளியின் வலி கண்டு மருத்துவனே துடித்தால் என்ன ஆவது?  அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன்.  அந்தப் பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருந்தன.  எல்லாமே விவேகம் Marquis de Sade எழுத்துக்கள்தான்.  என் வீட்டுப் பெண்களின் ஜனன உறுப்புதான் … Read more

Vivegam Review by Charu Nivedita

கண்ணுக்குட்டிங்களா, சிறுத்தை சிவா குடுத்த மன உளைச்சல்ல ஒரு முக்கியமான பாய்ண்ட்டை மிஸ் பண்ணிட்டேம்பா. அஜித் சர்வதேச பயங்கரவாதியைப் பிடிக்கச் செல்கிறார். உயிரோடு வருவாரா இல்லையான்னு தெரியாது. மனைவி காஜலுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறார். எங்கே? நெற்றியின் மேலே வகிடு எடுக்கும் இடத்தில். அதிலும் உதடு படாமல். அடக்கடவுளே,  சிறுத்தை சிவா, இப்படியா அஜித்தை நீங்கள் பழிவாங்குவீர்கள் என்று உள்ளுக்குள் கதறினேன். கமல் படம் பார்த்ததே இல்லையா சிவா?!

ஐட்டம்

பல அறிவுக் கொழுந்துகள் என்னிடம் “சாரு, உங்களுடைய உயரம் என்ன, கெத்து என்ன, நீங்கள் போய் இந்தக் காமன்மேன் பார்க்கும் பிக் பாஸ் ஷோவைப் பார்க்கலாமா, ஷேம் ஆன் யூ” என்று சொன்னார்கள். முந்தாநாள் அந்த டான்ஸர் பெண் சுஜா (பெயர் சரிதானே?) தன் வாழ்க்கை பற்றி கன்ஃபஷன் அறையில் நம்மிடம் – அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் 2 கோடி தமிழர்களிடம் (ஓவியா இருந்த போது நாலு கோடி) – சொன்னார். கண்ணீர் கன்னத்தில் வழியவில்லை. கலங்கிக் … Read more