சாருவின் காவிய மரபிலான கதைசொல்லல் – ந. முருகேசபாண்டியன்

தமிழரின் அடையாள அரசியலும் பாலியல் மறுபேச்சுகளும்: சாருவின் புதிய எக்ஸைல் நாவலை முன்வைத்து ந. முருகேசபாண்டியன் காத்திரமான நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியரான எனது நண்பர், “இன்றைய தேதியில் பாண்டியன் நீங்கதான் அதிகமாகத் தமிழ் நாவல்களை வாசிக்கிறீங்க” என்று அலைபேசியில் பேச்சுவாக்கில் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2010-ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட ‘பத்தாண்டுகளில் தமிழ் நாவல்கள்’ என்றொரு கட்டுரை, காலச்சுவடு பத்திரிகையில் பிரசுரமானவுடன், இலக்கிய நண்பர்களில் சிலர் எப்படி இவ்வளவு நாவல்களை உங்களால் வாசிக்க முடிந்தது என்று … Read more

கமல் அரசியல் – சில கேள்விகள்

இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர். தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அதிலும் சிநேகன் விட்டால் அப்படியே தரையிலேயே படுத்துக் கிடப்பார் போல் இருக்கிறது. அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆட்சியில் அடிமைகள் எப்படி உடலை வளைப்பார்களோ, மந்திரிகள் மந்திரி சபையில் எப்படி உடம்பை … Read more

Lanza del Vasto – 1

வாஸ்தோவை எனக்கு ஒரு மாதமாகத்தான் தெரியும்.  என்னமாய் எழுதுகிறான்.  எப்பேர்ப்பட்ட பேரழகன்.  பெண்ணாக இருந்திருந்தால் அவனைக் காதலித்திருப்பேன்.  இப்படி ஒரு அழகனை சமீபத்தில் கண்டதில்லை.  அவனுடைய சமீபத்திய கவிதை இது: அலைபேசியதிலிருந்த பதற்றமில்லை அவளிடம் நிதானமாய் கதவைத் திறந்தாள் அவரெங்கே என்றேன் வணக்கம் என்று கை குவித்து அதைத் தன் வலக்கன்னம் வைத்து கையோடு தலைசாய்த்தாள் எட்டிப்பார்த்தேன் திறந்திருந்த படுக்கையறையின் கதவு அவர் மல்லாந்து படுத்திருப்பதைக் காட்டியது என் தோள் மிருதுவான ஸ்பரிசம் உணர திடுக்கிட்டுத் திரும்பினேன் … Read more

எனக்குப் பிடித்த கவிதை

அபிலாஷ் என்னைப் பற்றி எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.  அதைப் பாராட்டி பல நண்பர்கள் எழுதியிருந்தனர்.  என் வாழ்வில் என்னை இத்தனைத் துல்லியமாக அவதானித்து யாரும் எழுதியதில்லை.  என் எழுத்து பற்றி இவ்வளவு துல்லியமாக எழுதியவர் அராத்து. அபிலாஷ் ஒரு மனோதத்துவ நிபுணனைப் போல, ஒரு மந்திரவாதியைப் போல் என் மனசுக்குள் புகுந்து பார்த்து விட்டார். அடுத்து, கஸலின் கடிதம்.  இத்தனை துல்லியமாக நான் எழுதிய எல்லாவற்றையும் ஒரு ஆத்மா படித்திருக்கும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.  அதிலும் … Read more