300 பிரதிகள்…

பலமுறை எழுதியதுதான்.  மீண்டும் எழுதும் சூழ்நிலை.  மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், அவர்கள் இந்தச் சூழலில் திருப்தி அடைகிறார்கள்.  நானோ இந்தச் சூழலையே அந்நியமாகப் பார்க்கிறேன்.  ஏன்?  உலக இலக்கியமும் உலக சினிமாவும் நன்கு அறிந்த கமல்ஹாசன் போன்ற ஒருவரே தான் எழுதும் கிறுக்கல்களை கவிதை என்று நினைத்துத் தன்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறார்.  ஞானக்கூத்தனே என் கவிதைகளைப் பாராட்டியிருக்கிறார் என்றால், அதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.  அவந்திகா என்னிடம் … Read more

ச்சிண்ட்டூவின் காதல்…

இந்தியாவில் வாழ்பவர்களுக்கு இங்கே நிலவும் பெண்ணடிமைத்தனம் கண்டு நெஞ்சு கொதிக்கும். எனக்கு தினமும் கொதிக்கிறது. ஆனாலும் காதலர்கள் உலகில் காதலன் தான் காதலியின் காலில் விழுந்து கிடக்க வேண்டியிருக்கிறது என்பதும் எதார்த்தம்தான். பூனைகளின் உலகில் பெண்ணடிமைத்தனம் இல்லை போல் இருக்கிறது. நம் ச்சிண்டூ இளைஞனாகி விட்டது. அவ்வப்போது அடுத்த தெருவுக்குப் போய் ஒரு வாரம் பட்டினி கிடந்து காதல் செய்து விட்டு வரும். பட்டினி என்று எப்படித் தெரியும் என்றால் அது கானாங்கெளுத்தி மீனைத் தவிர வேறு … Read more

good morning…

ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட நூறு கவிதைகள் எழுதினேன் இல்லையா? அதைப் பலரும் திட்டினார்கள். நெருங்கின நண்பர்களே திட்டினார்கள். ஆனாலும் கூச்சப்படாமல் எழுதியதற்குக் காரணம், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் என்னுடையதை விட தரத்தில் கம்மிதான். மேற்கத்திய கவிதைக்கும் தமிழ்க் கவிதைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்தான் காரணம். இங்கே தர்மு சிவராமு, தேவதச்சன் போல் எழுதினால்தான் கவிதை. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள். தோற்றத்தில் உரைநடையை மடித்து மடித்துப் போட்டது போல் தான் … Read more

மெர்சல்

மார்ஜினல் மேன் நாவலை ராப்பகலாக உட்கார்ந்து எடிட் செய்து கொண்டிருப்பதால் மெர்சல் படத்துக்கான விமர்சனம் எழுத முடியவில்லை. நம்ம வேலையைப் பார்ப்போம் என்ற மனநிலை. இந்தப் படத்தை விமர்சித்து எழுதி – அதை எழுத ரெண்டு மணி நேரம் ஆகும் – கண்டவனும் உன் வீடு தேடி வந்து உதைப்பேன் என்று மிரட்டி மெயில் போட… இந்தக் கருமம் எல்லாம் எதற்கு என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் நியூஸ் 18-இலிருந்து ஒரு போன். மெர்சல் பற்றியும் அதில் … Read more

வம்பே வேண்டாம்…

நேற்று ஒரு பேரழகியைச் சந்தித்தேன். பாலைவன வாழ்க்கையில் இப்படி எப்போதாவது நடப்பதுண்டு. பேரழகி பேசும் போது ஸ் ஸ் ஸ் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். என்ன பிரச்சினை என்றேன். வாயில் கொப்புளம் என்றார். அதற்கு ஒரு பவர்ஃபுல் மருந்து எனக்குத் தெரியும். சொன்னால் வயதானவர், பெருசு என்பார்கள் என்பதால் சும்மா இருந்து விட்டேன். இருந்தாலும் மனசுக்குள் அடித்துக் கொண்டது. இப்படி மருந்து தெரிந்தும் சும்மா இருக்கிறோமே என்று. இன்றைய தினம் தற்செயலாக அதிர்ஷ்டவசமாக அந்தப் பேரழகியை … Read more

தீபாவளி நாட்குறிப்பு

  தீபாவளி நாட்குறிப்பு என்று எழுதுவதை விட தீபாவளி வயிற்றெரிச்சல் என்று எழுதுவதே பொருத்தம்.  ஒவ்வொரு ஆண்டும் ஏண்டா தீபாவளி வருகிறது என்றே பொங்கும் மனம்.  எல்லாம் நாஸ்டால்ஜியா தான்.  வாயில் மெழுகாகக் கரையும் தேன்குழல், கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும் முள்ளு முறுக்கு, சுழியம், அதிரசம், மைசூர் பாகு, சீடை, வெல்லச் சீடை, ரவா லாடு, பொருளங்கா உருண்டை என்ற தீபாவளி அமர்க்களம் எல்லாம் வெறும் நினைவாக மட்டுமே ஆகி விட்டது.  காலையில் அரசனைப் போலவும், மதியம் … Read more