செடியில் குடும்பப் பேட்டி

என்னய்யா தீங்கு செய்தேன் உங்களுக்கு?  தெரியாமல் செய்கிறீர்களா, தெரிந்தே அவமதிக்கிறீர்களா?  அவந்திகா சொல்வதைப் பார்த்தால் இரண்டாவது விஷயத்துக்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.  விஷயம் இதுதான்.  செடி பத்திரிகையில் என் குடும்பப் புகைப்படமும் பேட்டியும் வந்துள்ளது.  அவந்திகாவின் பேட்டி என்றே சொல்லலாம்.  ஒரு எழுத்தாளனின் மனைவியின் பேட்டி.  படித்து விட்டு அவந்திகா, ”இதை எழுதிய பரிசல் கிருஷ்ணாவுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  செடி பத்திரிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.  இதுவரை என் … Read more

அறம் – 3

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எடை தூக்கும் பயிற்சிக்கும் பாக்சிங் பயிற்சிக்கும் போய்க் கொண்டிருந்தேன்.  பார்க்க பயில்வான் மாதிரி இருப்பேன்.  அப்போது ஒரு மாற்றத்துக்காக முடியை ஒட்ட வெட்டிக் கொண்டேன்.  அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சில்லம் அடிப்பதுண்டு.  ஆனால் என்றைக்குமே அடிக்ட் ஆனதில்லை.  கவனம்.  அதைத் தேடி பார்க் பக்கம் போவேன்.  அங்கே தான் அது கள்ளத்தனமாக விற்கப்படும்.  ஆனால் என்னைப் பார்த்ததும் எல்லோரும் ஓடி விடுவார்கள்.  இப்படியே போய்க் கொண்டிருந்ததால் என் நண்பர்கள் என்னை மட்டும் வெளியே … Read more

அறம் – 2

இதுவரை என் பிராமண நண்பர்கள் அத்தனை பேருமே கமலைத் திட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் – சுமார் 30 ஆண்டுகளாக – கமலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த ஜென்மம் நான். இனி ஒருபோதும் கமல் மீது நட்பு பாராட்ட மாட்டேன். ஷங்கரை அவர் இரண்டு முறை எழுத்தாளர் என்று அழைத்தது அவலம். அவலம். அவலம். இரண்டாவது முறை அவர் எழுத்தாளர் ஷங்கர் என்று மட்டுமே சொன்னார். இயக்குனர் என்றே சொல்லவில்லை. இதைப் போன்ற வடிகட்டின அராஜகத்தை என் வாழ்நாளில் … Read more

அறம்

கோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்.  மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம்.  உலக அளவில் கூட மிகவும் கம்மி தான்.  மேலும் கோபி அந்த ஆய்வை வெளியிலிருந்து செய்யவில்லை.  அவரே அதை அனுபவித்துப் பார்த்து எழுதினார்.  மனநல விடுதிகளில் தங்கினார்.  மருந்துகளை உட்கொண்டார்.  பல நூறு கதைகள் எழுதினார்.  சிறு பத்திரிகைகளில்.  இலவசமாக.  வாழ்நாள் பூராவுமே இலவசமாகவே எழுதினார்.  நக்கீரன் பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக வேலை … Read more

இன்று வேண்டாம்…

எப்போதடா நாய்களுக்குப் பணிவிடை செய்யாத வாழ்க்கை லபிக்கும் என்று தினந்தோறும் வேண்டிக் கொள்கிறேன்.  ஒரு நாளில் நான்கு மணி நேரம் பப்பு ஸோரோவுக்கே போய் விடுகிறது.  ச்சிண்ட்டுவுக்கு நேரமே ஆவதில்லை.  பூனைகள் தன் பாட்டுக்கு வளர்கின்றன.  நாய்கள்தான் எத்தனை வயது ஆனாலும் சிசுவைப் போல் நம் கவனிப்பை எதிர்பார்க்கின்றன.  மாதம் முடியும் போது 28 அல்லது 29-ஆம் தேதி பப்பு, ஸோரோவுக்குப் பூச்சிக் கொல்லி மாத்திரை கொடுக்கவில்லை என்றால், கொடுக்க மறந்து போனேன் என்றால், முதல் தேதியிலிருந்து … Read more