வம்பே வேண்டாம்…

நேற்று ஒரு பேரழகியைச் சந்தித்தேன். பாலைவன வாழ்க்கையில் இப்படி எப்போதாவது நடப்பதுண்டு. பேரழகி பேசும் போது ஸ் ஸ் ஸ் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். என்ன பிரச்சினை என்றேன். வாயில் கொப்புளம் என்றார். அதற்கு ஒரு பவர்ஃபுல் மருந்து எனக்குத் தெரியும். சொன்னால் வயதானவர், பெருசு என்பார்கள் என்பதால் சும்மா இருந்து விட்டேன். இருந்தாலும் மனசுக்குள் அடித்துக் கொண்டது. இப்படி மருந்து தெரிந்தும் சும்மா இருக்கிறோமே என்று. இன்றைய தினம் தற்செயலாக அதிர்ஷ்டவசமாக அந்தப் பேரழகியை … Read more

தீபாவளி நாட்குறிப்பு

  தீபாவளி நாட்குறிப்பு என்று எழுதுவதை விட தீபாவளி வயிற்றெரிச்சல் என்று எழுதுவதே பொருத்தம்.  ஒவ்வொரு ஆண்டும் ஏண்டா தீபாவளி வருகிறது என்றே பொங்கும் மனம்.  எல்லாம் நாஸ்டால்ஜியா தான்.  வாயில் மெழுகாகக் கரையும் தேன்குழல், கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும் முள்ளு முறுக்கு, சுழியம், அதிரசம், மைசூர் பாகு, சீடை, வெல்லச் சீடை, ரவா லாடு, பொருளங்கா உருண்டை என்ற தீபாவளி அமர்க்களம் எல்லாம் வெறும் நினைவாக மட்டுமே ஆகி விட்டது.  காலையில் அரசனைப் போலவும், மதியம் … Read more