Zero Degree Publishing

இலங்கையிலிருந்து நஃப்லா இப்படிக் கேட்டிருக்கிறார்: தங்களின் புத்தகங்களை இலங்கையில் எவ்வாறு பெறுவது? பல்கலைக்கழக நூலகத்தில் ராஸ லீலா, ஸீரோ டிகிரி உட்பட மொத்தமாக ஒரு ஐந்து புத்தகங்கள்தான் இருக்கிறது.  எல்லாம் வாசித்தாயிற்று. இதனை உங்களிடமே கேட்பதற்கு மன்னிக்க லேண்டும். நஃப்லா, என் நண்பர்கள் காயத்ரியும் ராம்ஜி நரசிம்மனும் Zero Degree Publishing என்ற பதிப்பகத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் உள்ள பிரதானமான எல்லா எழுத்தாளர்களின் நூல்களும் காலக்கிரமத்தில் … Read more

300 பிரதிகள்…

பலமுறை எழுதியதுதான்.  மீண்டும் எழுதும் சூழ்நிலை.  மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், அவர்கள் இந்தச் சூழலில் திருப்தி அடைகிறார்கள்.  நானோ இந்தச் சூழலையே அந்நியமாகப் பார்க்கிறேன்.  ஏன்?  உலக இலக்கியமும் உலக சினிமாவும் நன்கு அறிந்த கமல்ஹாசன் போன்ற ஒருவரே தான் எழுதும் கிறுக்கல்களை கவிதை என்று நினைத்துத் தன்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறார்.  ஞானக்கூத்தனே என் கவிதைகளைப் பாராட்டியிருக்கிறார் என்றால், அதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.  அவந்திகா என்னிடம் … Read more

ச்சிண்ட்டூவின் காதல்…

இந்தியாவில் வாழ்பவர்களுக்கு இங்கே நிலவும் பெண்ணடிமைத்தனம் கண்டு நெஞ்சு கொதிக்கும். எனக்கு தினமும் கொதிக்கிறது. ஆனாலும் காதலர்கள் உலகில் காதலன் தான் காதலியின் காலில் விழுந்து கிடக்க வேண்டியிருக்கிறது என்பதும் எதார்த்தம்தான். பூனைகளின் உலகில் பெண்ணடிமைத்தனம் இல்லை போல் இருக்கிறது. நம் ச்சிண்டூ இளைஞனாகி விட்டது. அவ்வப்போது அடுத்த தெருவுக்குப் போய் ஒரு வாரம் பட்டினி கிடந்து காதல் செய்து விட்டு வரும். பட்டினி என்று எப்படித் தெரியும் என்றால் அது கானாங்கெளுத்தி மீனைத் தவிர வேறு … Read more

good morning…

ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட நூறு கவிதைகள் எழுதினேன் இல்லையா? அதைப் பலரும் திட்டினார்கள். நெருங்கின நண்பர்களே திட்டினார்கள். ஆனாலும் கூச்சப்படாமல் எழுதியதற்குக் காரணம், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் என்னுடையதை விட தரத்தில் கம்மிதான். மேற்கத்திய கவிதைக்கும் தமிழ்க் கவிதைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்தான் காரணம். இங்கே தர்மு சிவராமு, தேவதச்சன் போல் எழுதினால்தான் கவிதை. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள். தோற்றத்தில் உரைநடையை மடித்து மடித்துப் போட்டது போல் தான் … Read more