ப்ரும்மம்

வொய்ட்டி, ப்ளாக்கி, ப்ரௌனி என்று மூன்று தெரு நாய்களுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவைகளும் உணவுக்காகத் தெருத்தெருவாக அலைவதை நிறுத்தி விட்டு செயின் திருடர்களைப் பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.  (எங்கள் ஏரியாவில் செயின் திருடர்கள் ஜாஸ்தி.  பைக்கில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாவிக் கொண்டு போய் விடுவார்கள்.  அவர்களுக்கு என்ன தலையெழுத்தா, ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு தெருவைத் துப்புரவு செய்வதற்கு?)  எங்கள் தெருவின் பெயர் வெங்கடசாமி தெரு.  இந்தத் தெருவில் பதினோரு வருடங்களாக இருந்தாலும் … Read more