தடம் நின்றதில் ஆச்சரியமில்லை…

தடம் இதழ் நின்று போன விஷயத்தை நேற்று சாதனா செய்தியாக அனுப்பியிருந்தார்.  அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று பதில் அனுப்பினேன்.  இன்று காயத்ரி சொன்ன போது ரொம்ப நல்ல விஷயம், சந்தோஷமாக இருக்கிறது என்றேன். ஒரு இலக்கியவாதியான நான் அப்படிச் சொன்னது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த ஆச்சரியத்தை மட்டுப்படுத்துவதற்காக ஏதேதோ உளறி விட்டு உரையாடல் திசையை மாற்றி விட்டேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் தடம் இதழில் எதுவும் எழுதியதில்லை.  ஆரம்பத்தில் என்னுடைய ஒரு பேட்டி வந்ததோடு … Read more

Green Frontier

சீலே, பெரூ பயணக் கட்டுரைக்காக Frontera verde (Green Frontier) என்ற கொலம்பியன் வெப்சீரீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது த்ரில்லர் வகை சீரீஸ் அல்ல; ஒரு பொழுதுபோக்கு சீரீஸ் அல்ல என்றாலும் த்ரில்லர் genreஇல் எடுக்கப்பட்ட படு சீரியஸான சீரீஸ். நோட்ஸ் எடுத்துக் கொண்டேதான் பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் பார்த்த எபிசோடையே திரும்பப் பார்க்க வேண்டியிருக்கிறது. டாக்யுமெண்ட்ரியாக நான் பார்த்த பல விஷயங்களை இதில் புனைவாகப் பார்க்கும் போது அது தரும் அனுபவமே வேறாக இருக்கிறது. … Read more

சவத்தை வணங்கும் சமூகம் (1)

சமூகம் தன்னுடைய மூடத்தனத்தையும் மௌடீக வாழ்வையும் நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுத்தாளர்களைச் சாடுகிறது.  ரேப்பிஸ்ட்டைக் கேட்டால் அவனும் தன்னுடைய நியாயத்தை சொல்லத்தான் செய்வான்.  சிறைக் கைதிகளையே எடுத்துக் கொள்வோமே, எந்தக் கைதியைக் கேட்டாலும் அவன் தன்னை நிரபராதி என்றுதான் சொல்வான்.  ”நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.”  இதுதான் சிறைக் கைதிகளின் பொதுவாசகம்.  ஒரு கொலை நடந்திருக்கும். நாலு பேர் மேல் குற்றம் விழும்.  நாலு பேருமே நான் செய்யவில்லை என்பான்.  வேறு யார் தான் செய்தார்?  யாருமே செய்யவில்லை.  … Read more

Thug life…

ஆறு மாதங்களுக்கு முன்னால் எஜமானை வேண்டிக் கொண்டேன். எந்தக் காரியத்துக்காகவும் கடவுளையோ குருநாதரையோ வேண்டுவதில்லை. அப்பனுக்கும் குருவுக்கும் தெரியாதா பிள்ளையின் தேவை என்று நினைப்பு. ஆனால் உயிருக்குயிரானவர்களின் மரணம் தாங்க முடிவதில்லை. அப்படி ஒரு தருணத்தில் எஜமானை வேண்டிக் கொண்டேன். உயிர் திரும்ப வந்தது. எப்போது போவது என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை. அதில் நான் கொஞ்சம் பலவீனமானவன். எழுத்து விஷயத்தில் வாக்குக் கொடுக்காமலே காப்பாற்றுவேன். பணம் விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் … Read more