ஏ.ஆர். ரஹ்மான் விரும்பிக் கேட்ட என் பேச்சு

”இதனால்தான் நான் இந்து மதத்தை விரும்புகிறேன்” என்ற misleading-ஆன தலைப்பு இருந்ததால்தான் இந்த என்னுடைய பேச்சை இதுநாள் வரை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தப் பேச்சில் நான் வழக்கம்போல் சூஃபிகளைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பேசினேன். கூடவே இந்து மதத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் பற்றியும் பேசினேன். அதை எடுத்துத் தலைப்பாகப் போட்டு விட்டதால் சற்று குழப்பம். இந்த என்னுடைய பேச்சை சுமார் இரண்டரை லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள். இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுத்தான் ஏ.ஆர். … Read more

தேவையான நூல் பட்டியல்

சுமாராக ஒரு பத்து நண்பர்கள் எனக்கு அமெரிக்காவிலிருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பி வருகிறார்கள். அவர்களின் புத்தக பட்ஜெட் தீர்ந்து விட்டதா இன்னும் இருக்கிறதா என்று தெரியாத நிலையில் இதை ப்ளாகிலேயே எழுதி விடுகிறேன். கீழ்க்கண்ட புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. உடனடியாக இவற்றை ஆர்டர் செய்து விடாமல் எனக்கு எழுதிக் கேட்டு விட்டு பிறகு ஆர்டர் செய்தல் நலம். ஏனென்றால், எழுதாமல் ஆர்டர் செய்தால் ஒரே புத்தகத்தை பலரும் ஆர்டர் செய்யக் கூடிய சாத்தியம் இருக்கிறது. அந்தோனியோ ஸ்கார்மேத்தா … Read more

கல்லூரி நூலகங்களில் பழுப்பு நிறப் பக்கங்கள்…

ஒரு நண்பர் பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி மூன்றும் ஐம்பது பிரதிகளுக்குப் பணம் தருவதாகச் சொன்னார். சுமாராக 50000 ரூ. ஆகும். ஐம்பது பிரதிகளையும் கல்லூரி நூலகங்களுக்கு அனுப்பினால் ஒரு பிரதியை குறைந்த பட்சம் பத்து மாணவராவது படிப்பார். இல்லையா? எந்தெந்த கல்லூரிகள் என்று வாசகர்கள் எனக்குப் பரிந்துரை செய்யலாம். எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது என்பதால் கேட்கிறேன். தனிநபர் படிப்பதை விட ஒரு நூலகத்தில் வைத்தால் பலரும் படிக்கலாம். நானெல்லாம் நூலகங்களால் உருவானவன் தான். … Read more