அடியேனின் நேர்காணல்

அரூ இதழில் வெளியாகியுள்ள இந்த நேர்காணல்தான் அடியேனின் இதுவரையிலான நேர்காணல்களில் ஆக முக்கியமானது எனக் கருதுகிறேன். அரூ இதழில் அராத்து, செல்வேந்திரன் ஆகியோரும் என் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. அரூ குழுவினர் சுஜா, ராம், பாலா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. பின்னர் அரூ இதழைப் படித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.

பூச்சி 94

எத்தனையோ எழுத்தாளர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு இடையே எழுதியிருக்கிறார்கள்.  பெரும்பாலான கதைகள் நமக்குத் தெரியும்.  லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்றால், ஒன்று, நாடு கடத்தி விடுவார்கள்.  அல்லது, தூதராக ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.  அது ஏன் ஐரோப்பிய நாடு என்றால், அங்கே போனால்தான் திரும்பி சொந்த நாட்டுக்கு வர மனசு வராது.  பாப்லோ நெரூதா எல்லாம் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் தூதராகவே கழித்தவர்.  துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றால், … Read more