பூச்சி 100

என் எழுத்தைப் படித்தவுடனேயே பல கடிதங்கள் எழுதி எனக்குத் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் பெரியவர் பாலசுப்ரமணியன்.  இன்று அவரிடமிருந்து ஆறு ஏழு கடிதங்கள்.  அதில் ஒன்று, அம்மா பற்றி.  என் அம்மா பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தேன்.  அவந்திகாவை அம்மா அவமதித்து விட்டதால் பல ஆண்டுகள் அம்மாவையே பார்க்கவில்லை என்று.  ஆனால் நம் சாஸ்திரங்கள் அப்படிச் சொல்லவில்லை. அம்மா எப்படி இருந்தாலும் அம்மா அம்மாதான்.  ஒருபோதும் அம்மாவை விட்டுக் கொடுக்கக் கூடாது.  இந்தக் கடிதத்துக்கு மட்டும் … Read more

பூச்சி 99

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தத்துவத்தின் பக்கம் போனால் விலாசமின்றிப் போய் விடுவோம் என்று எழுதியிருந்தேன்.  உண்மைதான்.  பதினாறாம் நூற்றாண்டில் அப்பைய தீட்சிதர் என்ற ஒரு பிரமாதமான தத்துவ ஆசிரியர் இருந்தார்.  இந்திய வேதாந்தத்தை அப்பைய தீட்சிதரைத் தவிர்த்து விட்டு யாரும் கடக்க முடியாது.  மிகவும் ஒரு வண்ணமயமான வாழ்வை வாழ்ந்தவர்.  அவரைப் பற்றி நான் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.  ஏனென்றால், ஒருமுறை ”மது அருந்தினால் நம் உள்ளுக்குள்ளே உள்ள கெட்ட விஷயங்களெல்லாம் வெளியே … Read more

பூச்சி பற்றி வளன் அரசு

பூச்சி தொடரை இன்னொரு முறை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். பல வருடங்களாக சாரு இணையத்தில் எழுதினாலும் இந்தத் தொடரைத்தான் நான் முழுவதுமாக இணையத்தில் வாசிக்கிறேன். பழுப்பு நிறப் பக்கங்கள் மற்றும் ஒளியின் பெருஞ்சலனம்போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைப் பொருத்த வரை அவைகள் இரண்டும் வழிகாட்டிகள். அவை இணையத்தில் வாசித்த சமயம் அதில் சொல்லப்பட்டிருக்கும் புத்தகங்களையும் படங்களையும் தேடிப் பார்த்தும் படித்துமே போனது. பூச்சியும் நல்ல வழிகாட்டிதான் ஆனால் அதை மீறி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. பூச்சி 100ஐ தொடும் போது எப்படிக் கொண்டாடலாம் என்று … Read more