பூச்சி 102

நேற்று சீனியிடம் பேசினபோது இந்த அம்மா விஷயம் பற்றி ஒருசில அவதானிப்புகளைச் சொல்லி, எனக்கும் ஒருசில விஷயங்களை ஞாபகப்படுத்தினார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் மூலவியாதியால் மிகவும் அவஸ்தைப் பட்டேன்.  அதற்கு அவந்திகா ஒரு கை வைத்தியம் பண்ணினாள்.  அப்போது நாங்கள் சின்மயா நகரில் வசித்தோம்.  மூலத்துக்குப் பன்றிக்கறி மருந்து.  அதிலும் அதில் உள்ள வார் என்ற பகுதி.  பன்றிக்கு தோலிலிருந்து உள்ளே சதைப் பகுதிக்குப் போவதற்கு முன்னால் இடையில் பட்டையாக ஒரு பகுதி கொழுப்பாக இருக்கும்.  … Read more

பூச்சி 101

அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய சமஸ் அவர்களுக்கு, இந்தக் கடித விஷயத்தை நான் உங்களுக்கு ஒரு போன் மூலம் தெரிவித்திருக்க முடியும்.  ஆனாலும் இது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய விஷயமாகத் தோன்றியதால் திறந்த மடலாகவே எழுதி விட்டேன்.  என் வாழ்நாள் பூராவுமே மறக்க முடியாத இரண்டு நேர்காணல்கள் உண்டு.  ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த மகாப் பெரியவரின் நேர்காணல்.  பத்திரிகையாளர் கேட்கிறார், சுவாமி, உங்கள் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது உண்டா?  எப்பேர்ப்பட்ட மனிதரிடம் … Read more