படித்ததில் பிடித்தது

சென்ற ஆண்டு வந்ததை இப்போதுதான் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள்.  இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருந்தது.

வாசகர் கேள்வி: சாருநிவேதிதா, தனது ‘கனவுகளின் நடனம்’ புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே… படித்தீர்களா ?

இளையராஜா பதில்:

“ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து “ராஜா ஆடியோ சென்டர்” என்றோ “இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்” என்றோ அல்லது “இளையராஜா பேக்கரி” என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். “நானும் ராஜாவும்” என்றுகூட SPB கச்சேரி பண்ணினான். எத்தனையோ இசைக்குழுக்கள் “ராஜா ராஜாதான்” என்றும் இன்னும் பற்பலவாறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு தானே இசை நிகழ்ச்சி நடத்துவதைப் போல அவர்கள் பிழைக்கிறார்கள். அதிலொன்ற…ும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது.

என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் (16.01.2012)//

No comments…

Comments are closed.