அய்யர் ப்ளாக்

யாவரும் கேளிர் என்று நினைக்கும் எனக்கு ஜாதிப் பற்றோ ஜாதி வெறுப்போ எப்படி இருக்க முடியும்? அதனால் எனக்கு ஜாதி என்பது ஒரு பெயர் மாதிரிதான். என்னால் ஒருத்தரை செட்டியார் என்றோ நாயுடு என்றோ அய்யர் என்றோ கூப்பிட முடியும். அது ஒரு பெயர். இன்றைய தினம் நகர வாழ்வில் அதுதான் நடந்துள்ளது. எனக்கு நகரம்தான் தெரியும். கிராமத்தில் இப்படி இல்லை என்றும் தெரியும். இந்த நண்பரை அய்யர் என்றே அழைத்து வருகிறேன். பிரஸன்ன வெங்கடேசன் என்று இன்றுதான் தெரிந்தது. இனிமேல் பிரஸன்னா என அழைக்க ஆரம்பிக்கலாம். இவரிடம் மிக நல்ல எழுத்துத் திறமை இருக்கிறது. இவர் எனக்கு எழுதிய சுமார் ஐம்பது நீண்ட கடிதங்கள் உள்ளன. கூடக் குறைச்சல் இருக்கலாம். தொகுத்தால் புத்தகமாகவே போடலாம். செம கிண்டல், நையாண்டி, வக்கிரம், எல்லாம் உண்டு. வட்டார வழக்கிலும் கில்லாடி. ஆங்கிலம் தப்பு இல்லாமல் தெரிகிறது. இது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். இவர் இன்று ப்ளாக் ஆரம்பித்திருக்கிறார். வருக வருக என வரவேற்கிறேன். அய்யர் ஒரு நாவல் எழுதினால் நன்றாக இருக்கும். இப்படிச் சிறு குறிப்புகளிலிருந்து தொடங்கட்டும்.

பிறழ்வெழுத்தின் பிதாமகர் (dopplegangerlive.blogspot.com)