2011இல் அசோகமித்திரனின் நாவல் மானஸரோவர் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்று அவரும் அவரது மொழிபெயர்ப்பாளரான கல்யாணராமனும் மும்பை சென்றது பற்றி மிக நெகிழ்ச்சியுடன் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன். அப்போது முதல் பரிசு பெற்றது Omair Ahmed’s Jimmy, The Terrorist. 2011க்குப் பிறகு தமிழிலிருந்து யார் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நானும் நந்தினியும் செல்கிறோம்.
Conversations with Aurangzeb க்ராஸ்வேர்ட் குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு வாசகர்களின் வாக்கு எண்ணிக்கையை வைத்து முதல் பரிசு வழங்கப்படும். முடிவு எட்டாம் தேதி நடக்க இருக்கும் விழாவில்தான் தெரியும்.
நாள்: டிசம்பர் 8, 2024
இடம்: LaLit Hotel, Andheri East
நேரம் : மாலை ஆறு மணி
அனைவரும் வாருங்கள். சென்னையிலிருந்து வர முடியாவிட்டாலும் மும்பையில் உள்ள நண்பர்கள் வரலாம்.