being a transgressive writer…

முத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதிகளின் இணைப்பை இங்கே தருவதை நீங்களும் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  என்னிடம் உள்ள ஒரு தன்மை பற்றி இப்போதுதான் எனக்கே தோன்றியது.  நான் தீட்சிதரின் கிருதிகளைக் கேட்பது போலவே Cradle of Filth-ஐயும் கேட்கிறேன்.  இரண்டுமே எனக்கு நெருக்கமாக இருக்கின்றன.  இப்படி இந்த இரண்டையும் கேட்கும் ஒரு human being ஐ நான் இதுவரை பார்த்ததில்லை.  போகட்டும்.  எனக்குத் தோன்றிய விஷயம் என்னவென்றால், கேட்பதில் என்னுடைய முதல் தேர்வு தீட்சிதர் என்றாலும் நான் இயங்குவது, எழுதுவது எல்லாம் Cradle of Filth  தான்.  நானும் அசிங்கத்தின் தொட்டிலும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது. அதனால்தான் என் எழுத்தை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.   நான் எதை எழுதுகிறேனோ அதையே cradle of filth  பாடுகிறது.  நான் விரும்பிக் கேட்பதுதான் தீட்சிதர்.  பின்வருவது அசிங்கத்தின் தொட்டில்…  இதுதான் ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தின் இசை வடிவம்…

https://www.youtube.com/watch?v=71pdBmrnvmE

 

Comments are closed.