பிச்சைக்காரன் எழுதிய ஒரு சிறிய காதல் கதை

பிச்சைக்காரன் எழுதியிருந்த இந்தச் சிறிய காதல் கதை பிடித்திருந்தது…

அவளை இம்ப்ரஸ் செய்ய அந்தக் காலத்தில் எனக்குத் தோன்றிய ஐடியா ரத்தக் கடிதம் எழுதுவது… முழுதும் எழுத முடியாவிட்டாலும் அவள் பெயரையாவது எழுதலாமே என நினைத்தேன்.. விரலில் எத்தனையோ முறை அடிபடுகிறது. ரத்தம் வருகிறது.. வலியெல்லாம் இருக்காது.. ஆனால் ஊசியால் கையைக் குத்திக் கொள்ள தைரியம் வரவில்லை.. ஃபிராடு ஐடியா ஒன்று தோன்றியது..பேசாமல் ஏதாச்சும் கோழி ரத்தத்தில் எழுதி அவளை ஏமாற்ற நினைத்து , அப்படியே செய்தேன்.. ஆனால் ஏமாற்றவும் மனம் வரவில்லை.. கடைசியில் என் ரத்தத்திலேயே எழுதினேன். அவளைச் சந்தித்தபோது காட்டினேன்.. அவள் மகிழவில்லை. டென்ஷன் ஆகி விட்டாள்.. ஏன் இப்படி சீப்பா நடந்துக்குறீங்க… உங்ககிட்ட இதை எதிர்பார்க்கவே இல்லை.. ஒரு வித மிரட்டல் இது.. வயலன்ஸ்..என்றெல்லாம் திட்டினாள்.. திடீரென சிரித்தாள்.. நீயாவது..ரத்தம் சிந்துவதாவது.. ஆட்டு ரத்தம்தானே..உண்மையச் சொல்லு என்றாள்.. ஹி ஹி.. ஆமா.. கண்டுபிடிச்சுட்டியே என்றேன்… ஆனால் இப்போது நினைத்தாலும் , அவளுக்காக அப்படிச் செய்ததில் வருத்தம் ஏதும் இல்லை.. அவளுக்கு அது தெரியாது என்பதிலும் கவலை இல்லை..