நான்கு வாக்கியம்

போன மாசம் ஒருநாள் நண்பரின் கெஸ்ட் ஹவுஸில் வைத்து முடிவெடுத்தோம்.  சாரு ஆன்லைனிலும் வட்டத்திலும் தினம் ஒரு போஸ்டிங் நாலு வாக்கியமாவது நான் எழுத வேண்டும் என்று.  மறுநாளிலிருந்து ஒரு செம வேலையில் மாட்டிக் கொண்டேன்.   அது ஒரு புது வேலை.  இதுவரை செய்திராதது.  ஒருநாள் ஒரு தொலைக்காட்சி சேனலிலிருந்து “சார், விஸ்வரூபம் பட சர்ச்சை பற்றி ஒரு விவாதம்.  கலந்து கொள்வீர்களா?” என்று கேட்டு ஒரு போன்.  என்னது சர்ச்சையா?  அந்தப் படம் ரிலீஸ் ஆய்டுச்சா?  எப்போ ரிலீஸ் ஆச்சு?  என்ன சர்ச்சை? என்று கேட்டேன்.  எதிர்முனையில் போனை வைத்து விட்டார்கள்.   சரி, அது என்ன செம வேலை என்று கேட்கிறீர்களா?  ஏப்ரல் மாதம் சொல்கிறேன்.

Comments are closed.