மீண்டும் ராஸ லீலா… மீண்டும் ஜெகா…

ஜெகா பேச்சுத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்.  ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஜெகா எழுதியிருப்பதைத் தருகிறேன்:

உலக இலக்கியங்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

தமிழ் புத்தகத்தை, செறிவான புரிதலோடு வேகமாக வாசிக்கும் பயிற்சி எனக்கு இருக்கிறது. ஆங்கிலப் புத்தகம் என்று வரும் போது தந்தியடிக்கும். ஏழாம் பக்கம் போய்த் திரும்ப ஆறாம் பக்கம் வருவேன், முழுமையான புரிதல் வரும்வரை பக்கங்களுக்குள் கபடி ஆடியபடியே இருப்பேன்.

இப்படியேதான் முன்பு கொஞ்சம் மார்க்கேஸ், ஓரான் பாமுக், லியோ தல்ஸ்தோய், முராகமி என்று கொஞ்சம் படித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் பயங்கரக் கடுப்பாகும். கண்ணாடி முன்னால் நின்று ‘it gives me no pleasure… I can’t do this anymore..awwwwww” என்று புலம்பியிருக்கிறேன்.

விஷயம் என்னானா பத்து வருஷம் முன்னாடி வரைக்கும் “you go i come” அளவுக்குத்தான் ஆங்கிலம் தெரியும். இப்ப கேள்வி ஞானத்துல கொஞ்சம் சராசரியா தெரியும். கெடக்கட்டும் என் இங்லீஸ் கத

போன குற்றால சந்திப்பில் மாங்கா மரத்தடில ஒக்காந்து ஏதேதோ பேசிட்ருந்தப்ப, விகடன்ல வந்த சிறுகதையைப் பத்தி விளாவாரியா சொல்லி கெக்கேபிக்கேன்னு சிரிச்சிட்ருந்தேன். என்ன சத்தமே காணோம்ன்னு இடது பக்கம் திரும்பிப் பார்த்தா சாரு உர்ருன்னு பாத்துட்ருந்தாரு. ஒண்ணும் புரிபடாம, இன்னோரு கதையப்பத்தி கெக்கேபிக்கேயோட “நட்சத்திர எழுத்தாளர்ன்னு போட்டு இப்டில்லா காமெடி பண்ணிட்ருக்காய்ங்க சாரு”ன்னு திரும்பி பாத்தேன்.

இன்னும் சூடாகிக் கண்டபடி திட்டிப்போட்டாரு.  ஒரு ஷார்ப்பான வார்த்தை “you are mentally abusing yourself by reading these” ன்னு திட்டிட்டு Roald Dahi யோட visitor கதை சொன்னாரு. வாவ், சாரு அருமையான கதை சொல்லி. அந்தக் கதை முடியிறப்பவே நான் கிறக்கத்துக்கு வந்துட்டேன். முடிச்சு சொன்னாரு. ஆங்கிலத்துல உலக இலக்கியம் கொட்டிக்கிடக்கு, இந்தக் குப்பைய எல்லாம் விட்டு நல்ல இலக்கியத்த படிக்க ஆரம்பிங்கன்னு.

அன்னைய்ல இருந்தே ஒரு மதப்போடுதான் இருந்தேன். புத்தகம் வாங்கலாம்ன்னு அமேசான் போனா ஷிப்பிங் சார்ஜ் ஐய்யாயிரம் வந்தது. அப்டி இப்டின்னு முட்டி ஒரு நண்பண்ட்ட பேசுனதுல கிண்டில் வாங்குன்னு சொன்னான். சரின்னு பாத்தா இங்க கிண்டில், அமேசானுக்கு தட (ங்கொய்யால 186 போர்ன் சேனல் இருக்குற சேட்டிலைட் டீவி செட் அப் பாக்ஸ் அநாசயமா இங்க கெடைக்குது, என்ன எழவுக்குலே கிண்டிலுக்கு தட…. இப்டில்லாம் கேக்க முடியுமா… பேருக்கு Constitutional Monarchy ன்னு சொல்லுவாய்ங்க, ஆனா புடுச்சு உள்ள போட்டா நம்ம தடம் 1098 வருஷத்துக்கும் கெடைக்காது… அவ்வ்வ் அடங்கு அடங்கு)

சமீபத்துல சென்னை வந்தப்ப அராத்து எனக்கு கிண்டில் கிஃப்ட் பண்ணாரு  (நல்ல மனுசன், அவரின் நண்பர்கள் இறந்த நாளை பற்றித் தெரிவித்தால் கிண்டில் கிஃப்ட் குடுப்பார், அவரின் தோழிகள் உடனடியாக இன்பாக்ஸ் போனால் இப்போதே கிஃப்ட் கொடுப்பார்)

கிண்டில் அருமையான Gadget… கைக்கு இலகுவாக இருக்கிறது, படிக்க Printed book feel தருகிறது. வார்த்தைகள் புரியலைன்னு அதுல அழுத்துனா அதுக்கு விளக்கம் வருது… செம்ம செம்ம..

என்னாலல்லாம் ஆங்கிலம் படிக்க முடியுமான்னு மலைச்சவன், புக்க கையில புடிச்சு படிக்கிற மாதிரி வராதுடே மக்கா ன்னு சவடால் விட்டுத் திரிஞ்சவனே மயங்கி போயிட்டேன். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்ன்னு ரகளையா போகுது. இப்ப ஆங்கிலம் படிக்க எந்த மனத்தடையும் இல்ல.

இன்னோரு அனுகூலம், எந்த புத்தகமா இருந்தாலும் Kindle Edition ன்னா புத்தகத்தின் 10% விலையில் கிடைக்குது. பெரும்பாலான உலக இலக்கியங்கள் பொதுவுடமை ஆக்கப்பட்டது இலவசமாவே கொட்டிக்கிடக்கு.

Kindle Basic Model ஆராயிரத்துக்குக் கெடைக்குது. ரகளையான பேப்பர்ஒய்ட் பத்தாயிரத்துக்குக் கெடைக்குது.

ஓக்கேய்…

சமீபத்துல வெளியான Paulo Coelho வோட Adultery 120 ரூவாய்க்கு வாங்குனேன். செம்ம ரகளையா இருந்துச்சு. இருந்தாலும் சாரு ஞாபகம் வந்துச்சு. அவரு இத விட ரகளை எல்லாம் ராசலீலாலயே பண்ணிட்டாரு… நான் எதுவும் சொல்லல, சாம்பிளுக்குக் கொஞ்சம் தந்துருக்கேன்….

//Today, when I leave the house to walk the kids to school, I take a good look at my neighbor. I’ve imagined having sex with a young reporter who works with me, the one who seems to be in a permanent state of suffering and solitude. I’ve never seen him try to seduce anyone, and that’s what’s so charming. All the women in the office have commented that “the poor thing needs someone to look after him”. I reckon he knows this and is happy merely to be an object of desire, nothing more. Perhaps, like me, he has a terrible fear of taking a false step and ruining everything-his job, his family, hus past and future life.

Anyway, I look at my neighbor this morning and feel like crying. He is washing his car, and I think: “look at that, another person just like me and my husband. One day we’ll be doing the same thing. Our children will have grown up and moved to another city, or even another country. We’ll be retired, and will spend our time washing our cars even if we can perfectly well afford to pay someone else to do it for us//

மொத பாராக்கும் ரெண்டாம் பாராக்கும் :-))))) இதுல யாரு Poor? Desperate ?

//Then comes the time for the extramarital affairs. Women talk-do they ever!!-about their lovers and their insatiable fire. There’s an element of truth in this, because more od Masturbation-just as real as that of the women who let themselves be wooed by the first man who appeared, regardless of this attributes. They buy expensive clothes and pretend to be modest, even though they’re exhibiting more sensuality than a sixteen-year-old girl-the only difference being that the girl knows the power she holds//

:- )))))))))

கிகிகி

அம்புடுதேன்

Comments are closed.